Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மூன்றாம் நிலை நகராட்சி பணியாளர்கள்மீண்டும் பேரூராட்சிக்கு திரும்ப அனுமதி

Print PDF

தினமலர்               26.11.2010

மூன்றாம் நிலை நகராட்சி பணியாளர்கள்மீண்டும் பேரூராட்சிக்கு திரும்ப அனுமதி

ஸ்ரீவில்லிபுத்தூர்:மூன்றாம் நிலை நகராட்சிகளில் பணி புரியும் உதவியாளர், தலைமை எழுத்தர்கள் மீண்டும் பேரூராட்சியில் பணிபுரிய அனுமதித்து அரசு அனுமதித்து உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் 2004ல் பேரூராட்சிகளாக செயல்பட்டு வந்தவைகளில் சிலவற்றை மூன்றாம் நிலை நகராட்சிகளாக அரசு தரம் உயர்த்தியது. இவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது பணி தொடர்பான விஷயங்கள் அனைத்திற்கும் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலகத்திற்கோ, நிர்வாக இயக்குனர் அலுவலகத்திற்கோ செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் நகராட்சி ஊழியர்கள் தங்களை மீண்டும் பேரூராட்சிகளில் பணி புரிய அனுமதிக்க அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நகராட்சி நிர்வாக இயக்குனர் செந்தில்குமார், பேரூராட்சி பணிக்கு திரும்ப விருப்பம் தெரிவித்த மூன்றாம் நிலை நகராட்சிகளில் பணிபுரியும் தலைமை எழுத்தர், உதவியாளர் ஆகியோர் மீண்டும் அத்துறைக்கு செல்ல அனுமதித்து உத்தரவிட்டுள்ளார். விருப்பம் தெரிவித்தவர்கள் பேரூராட்சி இயக்குனர் அலுவலக்தை தொடர்பு கொண்டு, பணியிடங்கள் பற்றிய விபரத்தை பெற்று கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

உள்ளாட்சி அமைப்புகளில் மாதந்தோறும் குறைதீர் கூட்டம் பொதுமக்கள் வலியுறுத்தல்

Print PDF

தினகரன்                26.11.2010

உள்ளாட்சி அமைப்புகளில் மாதந்தோறும் குறைதீர் கூட்டம் பொதுமக்கள் வலியுறுத்தல்

ஆவடி, நவ. 26: சென்னை புறநகரில் அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு, மதுரவாயல், வளசரவாக்கம், மாதவரம், திருவொற்றியூர், கத்திவாக்கம், ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், மணலி, பம்மல், அனகாபுத்தூர், உள்ளகரம்&புழுதிவாக்கம் உள்ளிட்ட நகராட்சிகள் உள்ளன.

இப்பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கான அடிப்படை வசதிகளை உள்ளாட்சி நிர்வாகம் செய்து வருகிறது.

இருந்தாலும், குடிநீர், சாலை, தெரு விளக்கு, குப்பை அகற்றுதல், மழைநீர் அகற்றுதல், சுகாதாரப் பணிகள் உள்ளிட்ட பிரச்னைகளை தினசரி மக்கள் சந்திக்கிறார்கள். இவர்கள் குறைகள் குறித்து, பகுதி கவுன்சிலர்களிடம் தெரிவிக்கின்றனர். சில கவுன்சிலர்கள், அதிகாரிகளிடம் பேசி குறைகளை நிவர்த்தி செய்கிறார்கள். ஆனால், பல கவுன்சிலர்கள் மக்கள் பிரச்னைகளை கண்டு கொள்வதில்லை என மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இதனால், அடிப்படை வசதியின்றி தினசரி அவதிப்படுகின்றனர். பாமர மக்கள் தங்கள் குறைகள் குறித்து உள்ளாட்சி அதிகாரிகளிடம் தெரிவிக்க இயலவில்லை. படித்த ஒரு சிலர், அதிகாரிகளை சந்தித்து குறைகளை தீர்த்துக் கொள்கிறார்கள்.

உள்ளாட்சி அமைப்புகளில் பெண் கவுன்சிலர்கள் 33 சதவீதம் உள்ளனர். இவர்கள் மக்கள் குறைகளை தீர்க்க நேரடியாக வருவது கிடையாது. இவர்களின் கணவர்தான் ஆக்டிங் கவுன்சிலராகசெயல்படுகிறார். இவர்களில் ஒரு சிலர் மனைவிக்கு பதிலாக அவர்களே மக்களை சந்தித்து குறைகளை தீர்க்கிறார்கள். பலர் சொந்த தொழிலை கவனிப்பதிலேயே மும்முரம் காட்டுகின்றனர்.

இதனால், மக்கள் பிரச்னை தீர்ந்தபாடில்லை. கடந்த 4 ஆண்டுகளில் உள்ளாட்சி அமைப்புகளில் மாதந்தோறும் நடக்கும் கவுன்சில் கூட்டங்களில், சில கவுன்சிலர்கள் தங்கள் பகுதி குறைகள் குறித்து வாய் திறந்து பேசியதில்லை. கூட்டங்களுக்கும் சரிவர வருவது கிடையாது.

பெண் கவுன்சிலர்களுக்கு பதிலாக அவர்களது கணவர்கள் தான் கூட்டங்களில் பங்கேற்கின்றனர். இதனால், அவர்கள் பகுதி குறைகளை கூட்டத்தில் கூற அனுமதி கிடையாது. வெறும் வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியும்.

இதன் காரணமாக, மக்களின் சிறு குறைகள் கூட தீர்க்கப்படாமல் உள்ளது. அது நாளடைவில் பெரிய பிரச்னைகளாக உருவாகிறது. மக்கள் போராட்டம், மறியல் நடத்துகின்றனர். இதனால், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது.

எனவே, உள்ளாட்சி நிர்வாகம் மாதம் ஒரு குறிப்பிட்ட தேதியில் குறை தீர்க்கும் கூட்டத்தை தலைவர், அதிகாரிகள், கவுன்சிலர்கள் முன்னிலையில் நடத்த வேண்டும். இதில், அந்த தொகுதி எம்.பி., எம்எல்ஏக்கள் பங்கேற்று, பிரச்னைகளை நிவர்த்தி செய்ய உத்தரவு பிறப்பிக்கலாம்.

இவ்வாறு கூட்டம் நடத்துவதன் மூலம், பாமர மக்களும் நேரடியாக அதிகாரிகளை சந்தித்து குறைகளை கூறும் வாய்ப்பு கிடைக்கும். இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வாரிய அதிகாரிகள் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

Print PDF

தினமணி               25.11.2010

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வாரிய அதிகாரிகள் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

சென்னை, நவ. 24: நகராட்சி நிர்வாகத்தின் செயலர், சென்னை குடிநீர் வாரிய தலைவர் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருகம்பாக்கத்தை சேர்ந்த சேவாமன் அறக்கட்டளையைச் சேர்ந்த ஏ. நாராயணன் என்பவர் அரசுச் செயலர், நகராட்சி நிர்வாக செயலர், சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் ஆகியோரை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் அந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் நாராயணன் நேரில் ஆஜராகி கூறியது:

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். அந்த வழக்கில் பாதாள சாக்கடையில் கழிவு நீர் அடைப்புகளை மனிதர்கள் இறங்கி சரிசெய்வதைத் தடுக்கும் வகையில், உயர் நீதிமன்றம் சிறப்புக் குழு அமைத்து கடந்த அக்டோபர் 20-ம் தேதி உத்தரவு பிறப்பித்து. எனினும், அந்தக் குழு முறையாகக் கூடி விவாதிப்பதில்லை. உத்தரவு பிறப்பித்த பின்னர் அண்மையில் கூட 2 பேர் சாக்கடை அடைப்பைச் சரிசெய்யும் போது இறந்துவிட்டனர்.

எனவே, அந்தக் குழுவுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது ஓய்வுபெற்ற முதன்மைச் செயலரை தலைவராக நியமித்து, குழு சிறப்பாக செயல்பட உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.

அப்போது அரசு ப்ளீடர் ராஜாகலிபுல்லா கூறியது:

கழிவு நீர் அடைப்புகளைச் சரிசெய்ய இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. கழிவு நீர் அடைப்பு குறித்து எந்த புகார் வந்தாலும், உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.

அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாகும் நிலை உள்ளது. எனவே, அவர்கள் இந்த வழக்கு மறுமுறை விசாரணைக்கு வரும் போது, நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி விசாரணையை டிசம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 


Page 298 of 841