Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

இரணியல் பேரூராட்சி கூட்டம்

Print PDF

தினகரன்             23.11.2010

இரணியல் பேரூராட்சி கூட்டம்

திங்கள்சந்தை, நவ.23: இரணியல் பேரூராட்சி மன்ற அவசர கூட்டம் தலைவர் சுப்பிரமணிய பிள்ளை தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சரசம் கவுன்சிலர்கள் மகாலிங்கம், புஷ்பம், முருகன், ஆர்.வி.தாஸ், ஐயப்பன் பிள்ளை, ஷீலா, சிவதாணு, ஸ்ரீரெங்கநாதன், ஜலஜா குமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேரூராட்சிக்குட்பட்ட கக்கோடு தாமரைக்குளம் முதல் ஆத்திவிளை வரை சாலை ரூ18 லட்சத்து 17 ஆயிரம் செலவில் சிமென்ட் தளம் அமைத்தல், கண்ணாட்டுவிளை முதல் மேலக்கோடு வரை ரூ33 லட்சத்து 56 ஆயிரம் செலவில் சிமென்ட் தளம் அமைத்து சாலையை மேம்படுத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

பேரூராட்சி அலுவலகம் திறப்பு

Print PDF

தினமணி        22.11.2010

பேரூராட்சி அலுவலகம் திறப்பு

கும்பகோணம், நவ. 21: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருப்பனந்தாள் பேரூராட்சியில் அனைத்துப் பேரூராட்சிகள் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 50.92 லட்சத்தில் கட்டப்பட்ட பேரூராட்சி அலுவலகம், வணிக வளாகம், சமுதாயக் கூடம் ஆகியவற்றை கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி. மணி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார்.

அதைத்தொடர்ந்து, திருப்பனந்தாள் பேரூராட்சியில் 2,858 பேர், வீராக்கண் ஊராட்சியில் 1,324 பேர் என மொத்தம் 4,182 குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் தொடக்கிவைத்தார். மேலும், 19 பேருக்கு முதியோர் உதவித் தொகையாக தலா ரூ. 400 வீதம் அமைச்சர் கோ.சி. மணி வழங்கினார்.

கோட்டாட்சியர் அசோக்குமார், திருவிடைமருதூர் ஒன்றியக் குழுத் தலைவர் ராமலிங்கம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

பாபநாசம் பேரூராட்சி கூட்டம்

Print PDF

தினகரன்             22.11.2010

பாபநாசம் பேரூராட்சி கூட்டம்

பாபநாசம்,நவ.22: பாபநாசம் பேரூராட்சியின் சாதாரண கூட்டம் பேரூராட்சி தலைவர் சேக்தாவூது தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் கதிரேசன், செயல் அலுவலர் சவுந்திரநாயகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நியமனக்குழு உறுப்பினர் மணிகண்டன், கவுன்சிலர்கள் துரை, சரவ ணன், பாலகிருஷ்ணன், சத்தியவாணி, சண்முகம், வசந்தா, மேரி ஜோஸ்பின், சீனிவாசன், சரோஜா, இந்திரா, ஜெனட் ஆனந்தி, செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழக அரசின் சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் ரூ76.40 லட்சம் செலவில் சிமென்ட் சாலை அமைப்பது, பேரூராட்சியில் தற்போது நடை பெறும் புதிய அலுவலக கட்டடப்பணி மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிப்பது உள்பட பல்வேற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 


Page 303 of 841