Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

குடிநீர் திட்டம் செயல்படாமல் ஆக்கிரமிப்பு நகராட்சி நிலம் மீட்கவேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்

Print PDF

தினகரன்                22.11.2010

குடிநீர் திட்டம் செயல்படாமல் ஆக்கிரமிப்பு நகராட்சி நிலம் மீட்கவேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்

மன்னார்குடி, நவ. 22: மன்னார்குடி நகரத்திற்கு வடவாற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்திற்காக விலைக்கு வாங்கப்பட்ட நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள் ளன. அத்திட்டம் தொடர் ந்து செயல்படாமல் போன தால் ஆக்கிரமிக்கப்பட்டு ள்ள நிலத்தை மீட்டு நகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி உருவாக்கப்பட்ட கால கட்டத்தில் இந்நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக வடுவூர் வடவாற்றிலிருந்து வாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டு வந்து இங்குள்ள நீர் நிலை களை நிரப்பவும், அத்தண் ணீரை சுத்திகரிப்பு செய்து குடிநீராக பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டு 13 மைல் தூரத்திற்கு 78 ஏக்கர் பரப்பளவில் இடம் வாங்கப்பட்டது.

இருப்பினும் அக்காலகட்டத்தில் தொடர் நடவடிக்கை இல்லாததால் அப்போது அந்த நிலங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ளன.

இந்நிலையில் டி.எஸ்.சாமிநாத உடையார் என்பவர் நகராட்சி தலைவ ராக இருந்தபோது ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருந்த நிலங்களை மீட்டு வடுவூர், வடுவூர் வடபாதி, தென் பாதி, வடுவூர், புதுக்கோ ட்டை, காரிக்கோட்டை, செருமங்கலம், காரக்கோ ட்டை, நெடுவாக்கோட்டை உட்பட 7 கிராமங்கள் வழி யாக மன்னார்குடிக்கு வாய் க்கால் வெட்டப்பட்டு மன்னார்குடியில் உள்ள செங்கு ளம், ஆனந்த விநாயகர் கோயில் குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரப்பப்பட்டன. இதுதவிர மதுக்கூர் சாலை அருகே நகராட்சி நீர்தேக் கம் அமைத்து குடிநீர் சுத்தகரிப்பு செய்து குடி நீர் வழங்கப்பட்டது.

அத்திட் டம் தொடர்ந்து காலமாற்றத்தில் ஆங்காங்கே ஆக்கிரமிப்பு மீண்டும் தொடர்ந்த தால் கால்வாய் கள் தூர் ந்து போயின. இந்த குடிநீர்திட்டம் பின்னுக்கு தள்ளப்பட்டு முற்றிலும் கைவிடப்பட்டது. இந்நிலையில் நகராட்சி விலை கொடுத்து வாங்கிய 13 மைல் தூரம் உள்ள 78 ஏக் கர் நிலப்பரப்பும் முழுமையாக தனியாருடைய ஆக்கிரமிப்பில் உள்ளது.

இன்றை சூழ்நிலையில் மீண்டும் இந்த குடிநீர் திட்டம் செயல்படுவதற்கு வாய்ப்பில்லை என் பதால் இந்த குடிநீர் திட்டத்திற்காக வாங்கப்பட்ட நிலத்தை மீட்டு நகராட்சியிடம் ஒப்படைக்க வேண் டும் என பொதுமக்கள் கோ ரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபற்றி முன்னாள் நகராட்சி தலைவர் சிவா ராஜமாணிக்கம் கூறியபோது, சாமிநாத உடையார் நகராட்சி தலைவராக இருந்தபோது இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

நான் நக ராட்சி தலைவராக இருந்த போது இந்த நிலைத்தை அனுபவித்து வருபவர்களி டம் விற்பனை செய்துவிட்டு அந்த தொகையை நகராட்சி வருவாயில் சேர் த்து கொள்ளலாம் என்ற யோசனை இருந்தது. ஆனால் அந்த யோசனை நடைமுறைப்படுத்தவில்லை. இனியும் காலம் கடத்தாமல் உடனே நில த்தை மீட்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

70 பேரை பலிவாங்கிய கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றும் பணிகள் முடிந்தன

Print PDF

தினகரன்              22.11.2010

70 பேரை பலிவாங்கிய கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றும் பணிகள் முடிந்தன

புதுடெல்லி,நவ. 22: 70 பேரை பலிவாங்கிய கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றும் பணி முடிவடைந்தது. லட்சுமி நகரில் உள்ள லலிதா பார்க்கில் 5 மாடி கட்டிடம் கடந்த திங்களன்று இரவு 8 மணிக்கு இடிந்து விழுந்தது. மொத்த கட்டிடமுமே ஒருசில நொடிகளில் நொறுங்கி தரைமட்டமானது.

கட்டிடம் இடிந்து விழுந்ததுமே பேரிடர் மேலாண்மை ஆணையம், தீயணைப்புத் துறையினர், போலீஸ், மாநகராட்சி என பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தோண்டத் தோண்ட சடலங்கள் வந்து கொண்டேயிருந்தன. மொத்தம் 70 பேர் பலியானார்கள்.

இந்தக் கட்டிடத்தில் 2 மாடிகள் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது அம்பலத்துக்கு வந்தது. அனுமதியின்றி கட்டிய தளங்களுக்காக மாதம்தோறும் மாநகராட்சி அதிகாரிகள், போலீசாருக்கு கட்டிட உரிமையாளர் அம்ரித்பால் சிங் லஞ்சம் கொடுத்ததும் தெரியவந்தது. கட்டிட உரிமையாளர் அம்ரித் சிங் பால் கைது செய்யப்பட்டார்.

கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றுவதில் தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர். 100 மணிநேரத்துக்கும் மேலாக தொடர்ச்சியாக நடந்த இடிபாடு அகற்றும் பணி நேற்று முன்தினம் மாலை நிறைவடைந்தது. எல்லா இடிபாடுகளும் அகற்றப்பட்டுவிட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தார்.

கடைசியாக 48 மணிநேரத்தில் இடிபாடுகளை அகற்றியபோது ஒரு உடல்கூட கண்டெடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். கட்டிடம் இடிந்ததில் படுகாயமடைந்த 81 பேர் வெவ்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒரு சிலரது நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

இந்த விபத்தை தொடர் ந்து சட்ட விரோதமாக விதி முறைகளை மீறி கட்டப் பட்ட கட்டிடங்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க அரசு முடிவு எடுத்துள்ளது.

 

மாதம் ஒருமுறையே கொசு மருந்து தெளிப்பு: மாநகர்மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர் புகார்

Print PDF

தினமணி                 20.11.2010

மாதம் ஒருமுறையே கொசு மருந்து தெளிப்பு: மாநகர்மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர் புகார்

வேலூர், நவ. 19: வேலூரில் மாதம் ஒருமுறை மட்டுமே கொசு மருந்து தெளிக்கப்படுகிறது என்று மாநகர்மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர் புகார் தெரிவித்தார்.

வேலூர் மாநகர்மன்றத்தின் சாதாரணக் கூட்டம் மேயர் ப.கார்த்திகேயன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர் சீனுவாசகாந்தி பேசுகையில், வேலூரில் நாய்த் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். சாலைகளில் திரியும் கால்நடைகளைப் பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்து ஆணையர் செல்வராஜ் பேசுகையில், பிராணிகள் வதை தடுப்புச் சட்டம் உள்ளதால் நாய்களுக்கு ஆன்ட்டி ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்றார்.

மழைநீர் கட்டமைப்பு இல்லாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்க வலியுறுத்தல்

காங்கிரஸ் உறுப்பினர் ஜெயப்பிரகாஷ் பேசுகையில், வேலூரில் கொசுத்தொல்லை அதிகம் உள்ளதால், தெருக்களில் மக்கள் நடந்து செல்ல முடியவில்லை. மாதம் ஒரு முறை மட்டுமே கொசு மருந்து தெளிக்கப்படுகிறது.

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லாத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட வேண்டும். மழைநீரை சேகரிப்பதால் நிலத்தடி நீர் அதிகமாகும் என்றார்.

"வாரம் ஒரு முறை கொசுமருந்து தெளிக்கப்படும். தெளிக்காத ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று மேயர் பதிலளித்தார்.

மின்வாரியத்துக்கு ரூ.8 கோடி

மதிமுக உறுப்பினர் அருணாசலம் பேசுகையில், மின்வாரியத்துக்கு மாநகராட்சி எவ்வளவு கட்டண நிலுவை வைத்துள்ளது என்றார். இதற்கு பதிலளித்த மேயர், ரூ.8 கோடி செலுத்த வேண்டும் என்றார்.

புதை சாக்கடை குறித்து அதிகாரிகள் சரிவர விளக்கம் அளிப்பதில்லை என்று திமுக உறுப்பினர் முன்னா ஷெரீப் புகார் கூறினார்.

அதிமுக மாரிமுத்து பேசுகையில், எனது வார்டில் 20-க்கும் மேற்பட்ட குழல் விளக்குகள் எரியாததால், இருண்டு கிடக்கிறது என்றார்.

ஓட்டேரியில் ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்

தேமுதிக உறுப்பினர் பாலசுந்தரம் பேசுகையில், புதை சாக்கடைக்கு சிறிய டேப் அடித்து விட்டு பள்ளத்தை தோண்டி விடுகின்றனர்.

இதனால் விபத்துகள் நேரிடுகின்றன. தடுப்புக் கட்டைகள் அமைக்க வேண்டும். ஓட்டேரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். தண்ணீர் வரத்தே இல்லாமல் உள்ளது. மழை பெய்தால் தெருக்களில் நடந்து செல்லவே முடியவில்லை என்றார்.

இதையடுத்து, வேலூருக்கு இம்மாதம் 27-ம் தேதி முதல்வர் கருணாநிதி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மாநகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளுமாறு மேயர் அழைப்பு விடுத்தார். மாநகர்மன்ற துணைத் தலைவர் தி..முகமது சாதிக், ஆணையர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 


Page 304 of 841