Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

நகரில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற வலியுறுத்தல்

Print PDF

தினமணி           20.11.2010

நகரில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற வலியுறுத்தல்

மன்னார்குடி , நவ. 19: மன்னர்குடி நகரின் பிரதான சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

மன்னார்குடி நகர்மன்றத்தின் அவசரக் கூட்டம் தலைவர் (பொ) ஆர். தமிழரசி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, ஆணையர் எஸ். மதிவாணன், பொறியாளர் ஏ. முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

.வி.பி.கோபி, மு. சிவக்குமார், எஸ். கண்ணதாசன்: அண்மையில் பெய்த மழையால் பந்தலடி, ஆசாத் தெரு, பெரிய கம்மாளத் தெரு ஆகிய பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிப்பட்டுள்ளனர். மேலும், தொற்றுநோய் பரவும் ஆபத்தும் உள்ளது.

. சுதா: நகராட்சித் திட்டப் பணி, பொதுநிதி குறித்த தகவல்களை அறிக்கையாக உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும்.

எம்.எஸ். வீரக்குமார், எம். ராஜாசந்திரசேகரன்: சிங்காரவேலு உடையார் தெரு கழிவுநீர் ஓடை, சட்டிருட்டி வாய்கால் ஆகியவை தூர்வாரி சீரமைக்கப்படாததால், மழைக் காலங்களில் நகரப் பகுதி குடியிருப்புகளில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வருகிறது.

. ஆனந்தராஜ்: நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அடிப்படைப் பணிகள் ஏதும் நடைபெறவில்லை. திட்டப் பணிகள் குறித்து உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்யாமல், கூட்டத்தில் கொண்டு வரப்படும் தீர்மானங்களை எதிர்க்கிறோம்.

கை. கலைவாணன்: நகராட்சிக்கு சொந்தமான ஜேசிபி வாகனத்தை பழுது நீக்கி, இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே. வடுகநாதன்: நகரப் பகுதியில் துப்பரவுப் பணி மேற்கொள்ள ஒப்பந்தம் பெற்றவர் வேறு மாநிலத்தில் உள்ளார். புதிதாக மாற்று நிறுவனத்திற்கு பணி செய்ய ஒப்புதல் வழங்க வேண்டும். தலைவர் (பொ) ஆர். தமிழரசி: மழை நீரை உடனுக்குடன் அப்புறப்படுத்த உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய தகவல்கள் உறுப்பினர்களுக்கு தபால் மூலம் வழங்கப்படும், ஜேசிபி வாகனத்தை இயக்க உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, மழைக் காலத்தை முன்னிட்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நகராட்சி சார்பில் முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றார்.

 

குடிநீர்த் தொட்டி: நிதியைத் திரும்ப ஒப்படைக்கக் கூடாது

Print PDF

தினமணி               20.11.2010

குடிநீர்த் தொட்டி: நிதியைத் திரும்ப ஒப்படைக்கக் கூடாது

அறந்தாங்கி, நவ. 19: அறந்தாங்கியில் ரூ. 40 லட்சத்தில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டும் பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியைத் திரும்ப ஒப்படைக்கக் கூடாது என்று அறந்தாஙகி நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

அறந்தாங்கி நகர்மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதன் தலைவர் பழ. மாரியப்பன் தலைமை வகித்தார்.

கூட்டம் தொடங்கிய உடனேயே கோபாலசமுத்திரம் ஆழ்குழாய்க் கிணறு அருகே மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு 4 முறை டெண்டர் விட்டும் யாரும் ஒப்பந்தப்புள்ளி அளிக்காத காரணத்தால் இந்த ஒதுக்கீட்டை திரும்ப ஒப்படைக்க வகை செய்யும் தீர்மானத்துக்கு எதிர்ப்பு எழுந்தது.

நகர்மன்ற துணைத் தலைவர் டி..என். கச்சுமுஹம்மது (காங்.): ""இந்தத் திட்டம் 6-வது வட்ட மக்களுக்குப் பயனளிக்கும் திட்டம். பல ஊர்களில் உள்ள ஒப்பந்தக்காரர்கள் முன்வரவில்லை என்பதால், இந்த ஒதுக்கீட்டைத் திரும்ப ஒப்படைத்துவிடக்கூடாது. இந்த நிலைக்கு முழுக்க முழுக்க நகராட்சி பொறியியல் துறைதான் காரணம்.''

தலைவர்: ""நான்கு முறை டெண்டர் கோரப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆகவே அதிகாரிகள் நிதி ஒதுக்கீட்டைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். இந்தத் தொகை இப்போதைய விலைவாசி உயர்வில் மிகக் குறைவு என்று ஒப்பந்தக்காரர்கள் கூறுகிறார்கள். ஆகவேதான், இந்த முடிவுக்கு வர நேர்ந்தது.''

மு.வி. பார்த்தீபன் (திமுக): ""ஒப்பந்தக்காரர்கள் வரவில்லை என்று கூறுகிறீர்கள். வரவில்லை என்றால் அதற்கு காரணம் யார்?''

தி. முத்து (திமுக): ""இத்திட்டம் நிறைவேற்றப்படாவிடில், 6-வது வட்ட மக்கள் இந்த மன்றத்தைப் பற்றி என்ன நினைப்பார்கள்? மீண்டும் ஒருமுறை ஒப்பந்தக் தாரர்களிடம் பேசி முடிவு செய்யலாம்.''

நா. முத்துலதா (திமுக): ""எனது வட்டத்தில் நாகையா திருமண மண்டபம் அருகில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. பள்ளிக் குழந்தைகளை ஏற்றிவந்த தனியார் வேன் அதில் மாட்டிக்கொண்டு மீட்கப்பட்டது. திரௌபதி அம்மன் கோயில் பகுதியில் 20 நாட்களாக குடிநீர் வரவில்லை.''

மு.வி. பார்த்தீபன் (திமுக): ""எனது வட்டத்தில் அரசு ஆண்கள் பள்ளிச் சாலையில் உள்ள தனியார் பேக்கரியிலிருந்து கழிவுநீரைத் திறந்துவிடுவதால் அந்தப் பகுதியே கழிவுநீர்க் குளம்போல காட்சியளிக்கிறது. அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு இதை கண்டுகொள்வதில்லை. இதுபற்றி பல முறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துவிட்டேன். பலன் இல்லை.''

தலைவர்: ""குறைகளைச் சொல்லுங்கள். நடவடிக்கை எடுப்போம். பொத்தாம்பொதுவாகக் குற்றஞ்சாட்டக் கூடாது.''

. ராசம்மாள் (அதிமுக): ""காந்தி நகரில் அடிக்குழாய் மூலம் தண்ணீர் எடுத்தால், முழுக்க இரும்புத் துருதான் வருகிறது. ஆழ்குழாய்க் கிணற்றில் தண்ணீரை உறிஞ்சிவிட்டு நல்ல தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். காந்தி நகரில் 7-வது வீதியில் சாலையில் உள்ள வடிகால்கள் உடைந்து கழிவுநீர் சாலையில் தேங்கி உள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டும்.''

என். முருகேசன் (அதிமுக): ""களப்பகாடு முதல் வீதியில் மனிதர்கள் நடமாட முடியாத அளவிற்கு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. நகராட்சி லாரி மூலம் மண் அடித்து சீரமைக்க வேண்டும்.''

இவ்வாறு விவாதம் நடைபெற்றது. கூட்டத்தில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

இடம் கொடுத்தவருக்கு நகர்மன்றக் கூட்டத்தில் பாராட்டு

Print PDF

தினமணி              20.11.2010

இடம் கொடுத்தவருக்கு நகர்மன்றக் கூட்டத்தில் பாராட்டு

திருவள்ளூர், நவ. 19: திருவள்ளூர் நகராட்சிக்கு 3857 சதுர அடி இடம் தானமாக கொடுத்தவரை நகர்மன்ற தலைவர், நகராட்சி ஆணையர் மற்றும் கவுன்சிலர்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

÷திருவள்ளூர் நகர்மன்ற அவசர கூட்டம் வெள்ளிக்கிழமை நகர்மன்ற தலைவர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் முத்துராமேஸ்வரன் முன்னிலை வகித்தார்.

÷இதில், நகராட்சி 2-வது வார்டுக்கு உள்பட்ட 35 பயனாளிகளுக்கு கலைஞர் கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குதல், பாதாள சாக்கடைப் பணிகள் முடிவுற்ற பகுதிகளில் 99 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை அடுத்து 2, 3, 7, 13, 17 மற்றும் 18 ஆகிய வார்டுகளில் சிமென்ட் சாலை மற்றும் தார்ச்சாலைகள் அமைத்தல், நகராட்சிக்கு உள்பட்ட 7-வது வார்டில் உள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளிக்கு 10 லட்சம் செலவில் கூடுதல் கட்டடம் கட்ட பணி உத்தரவு வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

÷நகராட்சி அலுவலக கட்டடத்துக்கு எதிர்புறம் வி.எம்.நகர் செல்லும் பிரதான சாலையில் உள்ள நிலம் தொடர்பான வழக்கில் நில உரிமையாளரான செங்குன்றத்தைச் சேர்ந்த ராஜகோபாலின் மகன் முருகேசன் என்பவரின் பக்கம் சாதகமான தீர்ப்பு வெளியானதை அடுத்து நகராட்சி நிர்வாகத்தினர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இந்நிலையில் நில உரிமையாளர் முருகேசன் பிரச்னைக்குரிய இடத்தில் 133 அடி நீளம், 29 அடி அகலம் கொண்ட இடத்தை நகராட்சி நிர்வாகத்துக்கு தானமாக எழுதி கொடுத்துள்ளார்.இதையொட்டி திருவள்ளூர் நகர்மன்ற கூட்டத்தில் முருகேசனுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டது. துணைத் தலைவர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Last Updated on Friday, 10 December 2010 09:13
 


Page 305 of 841