Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

அய்யலூர் பேரூராட்சிக் கூட்டம்

Print PDF

தினமலர்                  20.11.2010

அய்யலூர் பேரூராட்சிக் கூட்டம்

வடமதுரை: அய்யலூர் பேரூராட்சிக் கூட்டம் தலைவர் சந்தானலட்சுமி தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் மத்தியாஸ், துணைத் தலைவர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தனர். அய்யலூர் பேரூராட்சியில் சிறப்பு சாலைகள் திட்டத்தில் 50 லட்ச ரூபாய்க்காக ரோடு பணிக்கும், களர்பட்டியில் உள்ள ஆழ்குழாய் ஒன்றில் மினிபவர் பம்ப் பொறுத்து, குடிநீர் தொட்டி அமைப்பது என முடிவு செய்யப்பட்டதுஇதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டரின் நவம்பரில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் அய்யலூர் முராரிசமுத்திரம்குளம், தும்மினிக்குளத்தில் தலைவர் சந்தானலட்சுமி தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. மரக்கன்றுகளை பாதுகாப்புடன் வளர்க்க வேலி அமைக்கவும், பாதுகாவலர் ஒருவர் அமர்த்தவும் முடிவு செய்யப்பட்டது.

 

ஊரணி விவகாரம் விஸ்வரூபம் :ரூ.5 கோடி ரோடு திட்டம் கேள்விக்குறி

Print PDF

தினமலர்                  20.11.2010

ஊரணி விவகாரம் விஸ்வரூபம் :ரூ.5 கோடி ரோடு திட்டம் கேள்விக்குறி

சிவகாசி: சிவகாசி நகராட்சி கூட்டத்தில் ஊரணி விவகாரம் காரணமாக கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. சிவகாசி நகராட்சி கூட்டம் துணைத்தலைவர் அசோகன் தலைமையில், கமிஷனர்(பொறுப்பு) முருகன் முன்னிலையில் நடந்தது. கூட்டம் துவங்கியதும் தி.மு.., கவுன்சிலர்கள் பாலசுப்பிரமணியன், பாண்டி, .தி.மு.., கவுன்சிலர்கள் பாலகுரு, திருமுருகன் ஆகியோர் "ஏழைகள் புறம்போக்கில் குடியிருந்தால் பட்டா வழங்கவிடாமல் வட்டார வரி செலுத்துவோர் சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் தடை பெறுகின்றனர். ஆனால் வசதியானவர்கள் இடத்தை ஆக்கிரமித்தால் கண்டுகொள்வது இல்லை. கவுன்சிலர்கள் 10 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிவிட்டு பேசாமல் இருப்பதாக கூறி வருகின்றனர்' என்றனர். துணைத்தலைவர்: வெளியில் நடக்கும் பிரச்னைக்கும், கவுன்சில் கூட்டத்தையும் சம்மந்தப்படுத்த கூடாது. ஊரணி குறித்து வருவாய்துறையிடம் தான் கேள்வி கேட்க வேண்டும். கூட்டம் முடிந்து பேசலாம். பாலசுப்பிரமணியன், திருமுருகன்: இதே பதிலை நான்கு ஆண்டுகளாக கேட்டதுதான் மிச்சம். பிரச்னைக்கு முடிவு செய்து விட்டு கூட்டம் நடத்துங்கள். துணைத்தலைவர்: கூட்டத்தை ரத்து செய்ய முடியாது. நகரில் 5 கோடியில் ரோடுகள் அமைக்க தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப வேண்டிய கட்டாயம் உள்ளது. நான்கு கவுன்சிலர்களும், "வெளியேறமுடியாது. கூட்டம் எப்படி நடக்கிறது என பார்ப்போம் என ஆவேசமாக மேஜை தட்டி பேசினர். இதையடுத்து கூட்டம், மறு தேதி அறிவிக்காமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே நகராட்சியை முற்றுகையிட போவதாக தகவல் கிடைத்ததால் நகராட்சி முன் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டது. சிவகாசி நகராட்சிக்கு சிறப்பு சாலை திட்டத்தில் ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டது. இத் திட்ட வேலை செய்ய 19ம்தேதிக்குள் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப கோரியிருந்தனர். கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் 5 கோடி நிதி சிவகாசிக்கு கிடைக்குமா என கேள்விக்குறியாக உள்ளது.

 

மேல்விஷாரத்தில் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் ரூ40 லட்சத்தில் திட்டப்பணிகள்

Print PDF

தினகரன்            20.11.2010

மேல்விஷாரத்தில் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் ரூ40 லட்சத்தில் திட்டப்பணிகள்

ஆற்காடு, நவ.20: ரூ40 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய், குடிநீர் பைப்லைன் பணிகள் செய்வது என்று மேல்விஷாரம் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகராட்சியின் அவசர கூட்டம் அதன் தலைவர் முகமது கலிமுல்லா தலைமையில் நேற்று நடந்தது. துணைத்தலைவர் அஸ்நாத் அகமது, செயல் அலுவலர் மணிச்சாமி முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிறப்பு சாலை வசதி திட்டத்தின்கீழ் ரூ1.80 கோடியில் சாலைகள் அமைக்க வந்துள்ள ஒப்பந்தப்புள்ளிகளை அங்கீகரிப்பது. ரூ40 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய், குடிநீர் பைப்லைன் பணிகளை உடனடியாக நிறைவேற்றுவது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 


Page 306 of 841