Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

திருக்காட்டுப்பள்ளியில் ரூ5 லட்சத்தில் வளர்ச்சிப்பணி பேரூராட்சி கூட்டத்தில் முடிவு

Print PDF

தினகரன்                 19.11.2010

திருக்காட்டுப்பள்ளியில் ரூ5 லட்சத்தில் வளர்ச்சிப்பணி பேரூராட்சி கூட்டத்தில் முடிவு

திருக்காட்டுப்பள்ளி, நவ. 19: திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் ரூ5 லட்சத்தில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி கூட்டம் தலைவர் கோகிலாசிங்காரவேலு தலைமையில் நேற்று நடந்தது. துணைத்தலைவர் துரைராஜ், செயல் அலுவலர் மனோகர், தலைமை எழுத்தர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் குணசேகரன், வளர்மதி, மங்கையற்கரசி, இளங்கோவன், கண்ணகி, ரகமத்துல்லா, ரதி, மெய்யழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 2010 & 11 ஆண்டு கேளிக்கை வரி மான்ய திட்டத்தில் ரூ5 லட்சத்தில் ஓன்பத்துவேலி மயான மேம்பாடு செய்தல், இயக்கம் மற்றும் பராமரிப்பு நிதியில் ரூ15 லட்சத்தில் பாலாஜிநகர், 50ம் நம்பர் சாலையில் வடிகால் அமைத்தல், காவிரி நடுக்கரையில் ரூ2.50 லட்சத்தில் ஆழ்குழாய் கிணறு மற்றும் பம்பு ரூம் அமைத்தல் என ரூ22.5 லட்சத்தில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தவிர ஒன்பத்துவேலி அக்ரஹார தெருவில் தார் சாலை, கிறிஸ்துவ தெருவில் சிமென்ட் சாலை அமைத்தல், மார்க்கெட்டில் உள்ள ஆடு வதை கூடத்தில் காலை 6 முதல் 8மணிவரை மட்டுமே ஆடுவதை செய்ய அனுமதிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. செயல் அலுவலர் மனோகர் பேசுகையில் சுவர்ண ஜெயந்தி சகாரி ரோஜ்கார் யோஜனா திட்டம் 2010&2011ன் கீழ் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சிக்கு ரூ8 லட்சத்து 26 ஆயிரத்து 268 நிதி ஓதுக்கீடு கிடைத்துள்ளது. இதில் திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக 10 பயனாளிகளுக்கு ரூ84420ம், தனிநபர் கடன் 8 பயனாளிகளுக்கு ரூ3 லட்சத்து 60 ஆயிரமும், நகர்புற பெண்கள் சுயவேலைவாய்ப்பு திட்டத்தில் (ஊனமுற்ற பெண்கள்) 8 பயனாளிகளுக்கு ரூ. 2 லட்சத்து 70 ஆயிரமும், பயிற்சி மற்றும் சிக்கன நாணய சங்கம் அமைக்க 16 பயனாளிகளுக்கு ரூ90048ம் இதர செலவுகளுக்கு க்ஷீ 23,800ம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

 

பாதாள சாக்கடை உடைந்து ரோட்டில் பாயும் கழிவுநீர் மாநகராட்சி கூட்டத்தில் காரசார விவாதம்

Print PDF

தினகரன்                  19.11.2010

பாதாள சாக்கடை உடைந்து ரோட்டில் பாயும் கழிவுநீர் மாநகராட்சி கூட்டத்தில் காரசார விவாதம்

கோவை, நவ. 19: பாதாள சாக்கடை திட்ட பணிகளை சரியாக முடிக்காமல் விட்ட தால் ரோட்டில் கழிவுநீர் பாய்கிறது. பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக்கூறி பெண் கவுன்சிலர் கண் கலங்கினார். மா நகராட்சி கூட்டத்தில் கார சார விவாதம் நடந்தது.

கோவை மாநகராட்சி மன்ற அவசர கூட்டம் நேற்று நடந்தது. இதில் மேயர் வெங்கடாசலம், துணை மேயர் கார்த்திக், மாநகரா ட்சி கமிஷனர் அன்சுல் மிஸ் ரா, மேற்பார்வை பொறியா ளர் பூபதி, நகர பொறியாளர் கருணாகரன், செயற்பொறியாளர்கள் சுகுமார், கணேஷ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தி.மு.க கவுன்சிலர் (72வது வார்டு) சாந்தகுமாரி பேசுகையில், " காந்திமாநகர் பகுதியில் வீட்டு வசதி வாரிய வீடுகளில் அமைக்கப்பட்ட பாதாள சாக் கடை உடைந்த நிலையில் காணப்படுகிறது. சாக்கடை ரோட்டில் ஓடுகிறது.

பொதுமக்கள் கழிவறைகளை பயன்படுத்த முடி யாமல் தவிக்கிறார்கள். கழிவு நாற்றம் தாங்க முடியாமல் மக்கள் புகார் தெரிவித்த னர். தீபாவளி பண்டிகையை கூட மக்கள் சரியாக கொண் டாட முடியாமல் தவித்தனர். மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித் தும் நடவடிக்கை எடுக்கவில் லை. வார்டு மக்கள் கேட்கும் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அதிகாரிகள் நேரில் வந்து பார்த்தால் தான் நிலைமை தெரியும், " என்றார்.

கவுன்சிலர் சாந்தகுமாரி பேசியபோது கண் கலங்கினார். அதிகாரிகள் பணி செய்ய தாமதம் செய்வதாக புகார் கூறியதால் கூட்டத் தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் அ.தி.மு.க கவுன்சிலர் சுப்புலட்சுமி (55வது வார்டு) பேசுகையில், " பாதாள சாக்கடை சேம்பர் உடைந்து ரோட்டில் கழிவு வெள்ளம் ஓடுகிறது.

இதை சரி செய்வதில் லை. பொதுமக்கள் எங்களை பார்த்து, நீங்கள் ஏன் கவுன்சிலராக இருக்கிறீர்கள். நீங் கள் இதற்கு லாயக்கில்லை, பதவியை ராஜினாமா செய்யுங்கள், என சத்தம் போடுகிறார்கள். களி மண் ரோட் டில் சாக்கடை வெள்ளம் போ னால் மக்கள் எப்படி வசிக்க முடியும். மாநகராட்சி அதிகாரிகள் இதை ஏன் கவனிப்பதில்லை, " என்றார்.

64வது அ.தி.மு.க கவுன்சிலர் மெகர்பானு பேசுகை யில், " சேர்மன் ராஜூ நகர் பகுதியில் குடிசை மேம்பா ட்டு திட்டத்தில் ஒரு ஆண்டி ற்கு முன் பாதாள சாக்கடை பணி துவங்கியது. ஆனால் முடிக்கவில்லை. ரோடு தோண்டிய நிலையில் இருக்கிறது. மக்கள் நடக்க முடி யாமல் தவிக்கின்றனர். எப்போது பணி முடியும் என தெரியவில்லை, " என்றார்.

செயற்பொறியாளர் சுகுமார் பதிலளித்து பேசுகை யில், " காந்திமாநகர் பகுதியில் 1.5 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை பணி பல்வேறு கட்டமாக நடந்தது. 1 கோடி ரூபாய் செலவில் ரோடு பணி நடத்தப்பட்டது. சாக்கடை பணிக்கு ஆண்டு தோறும் 25 லட்ச ரூபாய் செலவிடப்பட்டது. வீட்டு வசதி வாரிய வீடுகளில் அமைக்கப்பட்ட சாக்கடை குழாய் களி மண்ணால் கீழே இறங்கி விட்டது. அதை சரி செய்யும் பணி படிப்படியாக நடத்தி வருகிறோம். ஒரே நேரத்தில் பணியை நடத்தி முடிக்க முடியாத நிலையிருக்கிறது. புகார் பெறப்பட்டதும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது, " என்றார்.

மாநகராட்சியில் யார் பினாமி....

மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கவுன்சிலர் மெகர் பானு, சாக்கடை பணி நடக்கவில்லை என புகார் கூறியபோது, மேயர் வெங்கடாசலம், எம்.எல்.., வேலுமணிக்கு வேண்டியவர் தான் ஒப்பந்த பணி எடுத்துள்ளார் என கூறினார். அப்போது மெகர்பானு கோபமடைந்து, ஏன் பணி நடத்தி முடிக்கவில்லை என்பதற்கு பதில் சொல்லுங்கள். எம்.எல்.ஏவை இதற்கு இழுத்து வைத்து பேசுகிறீர்கள் என்றார். இந்நிலையில் அ.தி.மு.க கவுன்சிலர் நடராஜ், " மாநகராட்சியில் யார் யாருக்கு பினாமி இருக்கிறார்கள் என வெளிப்படையாக சொல்லட்டுமா, " என்றார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

 

இன்று குடிநீர் குறைகேட்பு முகாம்

Print PDF

தினமணி                    18.11.2010

இன்று குடிநீர் குறைகேட்பு முகாம்

பெங்களூர், நவ. 17: பெங்களூர் நகர வடக்கு 3-ம் துணை மண்டலத்தில் குடிநீர் குறை கேட்பு முகாம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

÷இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: வடக்கு 3-ம் துணை மண்டலத்தில் உள்ள சஞ்சய்நகர், எலஹங்கா, ஆர்.டி.நகர் மற்றும் அதை சுற்றுயுள்ள பகுதிகளில் குடிநீர் குறை தீர்ப்பு முகாம் துணை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

÷தண்ணீர் ரசீது, குடிநீர் விநியோகத் தாமதம், கழிவுநீர் இணைப்பு மற்றும் வியாபார இணைப்புகள் குடியிருப்பு இணைப்புகளாக மாற்றுவது போன்ற குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

÷இது குறித்து தகவல் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண், 22945130, 22945139.

 


Page 308 of 841