Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

தனியாருடன் இணைந்து நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

தினகரன்                           18.11.2010

தனியாருடன் இணைந்து நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு மாநகராட்சி நடவடிக்கை

பெங்களூர், நவ. 18: தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் (என்.ஜி.) உதவியுடன் பெங¢களூரிலுள்ள தெருநாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யும் பணி நடந்துவருகிறது.

பெங்களூர் நகரில் மட்டும் 1 லட்சத்து 83 ஆயிரம் தெருநாய்கள் உள்ளதாக கடந்தாண்டு பிபிஎம்பி நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்தது. நகர மக்களுக்கு பெரும் தொல்லை கொடுத்துவரும் நாய்களின் அட்டகாசத்தை குறைப்பதற்காக அவற்றுக்கு குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை மேற¢கொள்ளப்படுகிறது. நகரிலுள்ள பல தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் பணிச்சுமை அதிகமாக இருப்பதாக கைவிரித்துவிட்டதால் மும்பை மற்றும் ஐதராபாத்திலிருந்து தலா 2 என்.ஜி.ஓக்கள் மற்றும் பெங்களூர் நகரில் 4 என்.ஜி.ஓக்கள் என மொத்தம் 7 நிறுவனங்களிடம் கு.க பணி அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாய்க்கு கு.க செய்வதற்கு ரூ.600 ஊதியமாக அளிக்கப்படுகிறது. 12 பேர் கொண்ட ஒரு குழுவில் 4 டாக்டர்கள் உள்ளனர். இரு பாலின நாய்களுக்குமே கு.க பொருந்துகிறது. ஒரு குழுவிற்கு 10 முதல் 12 வார்டுகள் பிரித்துக்கொடுக்கப்பட்டுள்ளன. அந¢த வார்டுகளில் உள்ள தெருநாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை மேற்கொள்ளும் பணியை இவர்கள் பார்த்துக்கொள்வார்கள். 10 நாட்களுக்கு முன்பு இப்பணி துவங்கியுள்ளது.

 

நகராட்சி பள்ளியில் குழந்தைகள் தின விழா

Print PDF

தினமணி                         16.11.2010

நகராட்சி பள்ளியில் குழந்தைகள் தின விழா

மானாமதுரை, நவ. 15: சிவகங்கை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. விழாவுக்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மைக்கேல்ராஜ் தலைமை வகித்தார். கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர் ஜோசப் அடைக்கலராஜ் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியை மரியசெல்வி வரவேற்றார்.

விழாவில் பள்ளிக் கல்விக்குழுத் தலைவர் சரவணன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பள்ளிக் குழந்தைகளுக்கு பேச்சு, மாறுவேடம், ரங்கோலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

 

"திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி'

Print PDF

தினமலர்                16.11.2010

"திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி'

திருப்பூர்: ""மக்கள் நலத்திட்டங்களை செயல் படுத்துவதில், மற்ற மாநிலங்களுக்கு முன் னோடியாக தமிழக அரசு விளங்குகிறது,'' என அமைச்சர் சாமிநாதன் பேசினார். நல்லூர் நகராட்சி 10வது வார்டு ஆர்.கே., கார்டன், 12வது வார்டு காளி யப்பா நகரில் ரேஷன் கடை திறப்பு விழா மற்றும் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா நேற்று நடந்தது. ஆர்.கே., கார்டனில், எம்.எல்.., நிதி மூன்று லட்சம் மதிப்பில் சொந்த கட்டடம் கட்டப் பட் டுள்ளது. ஆர்.கே., கார்டனில் பகுதிநேரம், காளியப்பா நகரில் முழுநேர கடையாக இயங்குகிறது. நகராட்சி பகுதியில் மூன்றாம் கட்டமாக, ரூ.6.66 லட்சம் மதிப்பில் 476 இலவச காஸ் அடுப்பு வழங்கப்படுகிறது. ரேஷன் கடை திறப்பு விழாவுக்கு, மாவட்ட வழங்கல் அலுவலர் ராமமூர்த்தி; இலவச அடுப்பு வழங்கும் விழாவுக்கு நகராட்சி தலைவர் விஜயலட்சுமி தலைமை வகித்தனர். மேயர் செல்வராஜ், எம்.எல்.., கோவிந்தசாமி முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் சாமிநாதன், ரேஷன் கடையை திறந்து வைத்து, பொருள் வினியோகம் மற்றும் பயனாளிகளுக்கு இலவச காஸ் அடுப்பு வழங்கும் பணியை துவக்கி வைத்தார். அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது: இலவச காஸ் அடுப்பு கிடைக்காத 720 கார்டுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்ததும் விரைவில் இணைப்பு வழங்கப்படும். தமிழக அரசின் திட்டங்களை பின்பற்ற, மற்ற மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. தமிழகத்தை தொடர்ந்து ஆந்திராவில், கிலோ 2 ரூபாய்க்கு அரிசி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக, தமிழகம் விளங்குகிறது. உலகளவில் ஊட்டச்சத்து பற்றாக்குறையில், இந்தியா 44வது நாடாக உள்ளது. மாணவர்களுக்கு வாரத்தில் ஐந்து முட்டை கிடைக்கிறது. இலவச "டிவி', கான்கிரீட் வீடு, சுழல்நிதி, பெண்களுக்கான உதவி என பல்வேறு திட்டங்களை அரசு செயல் படுத்துகிறது. இவற்றை பயன்படுத்தும் போது, மக்கள் முதல்வரை நினைக்க வேண்டும். இவ்வாறு, அமைச்சர் சாமிநாதன் பேசினார். கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் ராமமூர்த்தி, கலால் உதவி ஆணையர் பாண்டிபெருமாள், துணை தலைவர் நிர்மலா, செயல் அலுவலர் (பொறுப்பு) குற்றாலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 


Page 310 of 841