Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

15 வேலம்பாளையம் நகராட்சி புதிய அலுவலகத்தில் செயல்பட துவங்கியது

Print PDF

தினகரன்           11.11.2010

15 வேலம்பாளையம் நகராட்சி புதிய அலுவலகத்தில் செயல்பட துவங்கியது

திருப்பூர், நவ. 11: 15 வேலம்பாளையம் நகராட்சி அலுவலகம் நேற்று முதல் காந்தி ரோட்டில் உள்ள புதிய அலுவலகத்தில் செயல்பட துவங்கியது.

திருப்பூர் அடுத்துள்ள 15 வேலம்பாளையம் மூன்றாம் நிலை நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீட்டு வரி செலுத்தி வருகின்றனர். 11 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளது. 15 வேலம்பாளையம் நகராட்சியா னது, ஊராட்சியாக இருந்து பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மூன் றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் பேரூராட்சியாக இருந்தபோது அலுவலகத்தில் எத்தனை ஊழியர்கள் இருந்தார்களோ? அதே அளவுக்கு தான் தற் போதும் உள்ளனர். அதே போல் நகராட்சி அலுவலகமும் எந்த வித வசதியும் இன்றி இருந்து வந்தது. இதனால் வரி கட்ட வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். மேலும் நகர் மன்ற கூட்ட அரங்கமும் வசதி இல்லாமல் இருந்து வந்தது. இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பர்பாளையம் காந்தி ரோட்டில் சகல வசதிகளுடன் கூடிய புதிய அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டு, அலுவலக கட்ட டம் கட்டி முடிக்கப்பட்டது. புதிய அலுவலகத்தை கடந்த மாதம் 17ம் தேதி திருப்பூருக்கு வந்த துணை முதல்வர் மு..ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் நேற்று பழைய அலுவலகத்திலிருந்து அனைத்து பொருட்களும் புதிய அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டு செயல்பட துவங்கியது.

 

ஈ.வெ.ரா.சாலை ராஜா முத்தையா சந்திப்பு முதல் அமைந்தகரை வரை 9 சிக்னல்களை கடந்து செல்லும் பிரமாண்ட மேம்பாலம்; ரூ.300 கோடியில் கட்டப்படுகிறது

Print PDF

மாலை மலர்          10.11.2010

.வெ.ரா.சாலை ராஜா முத்தையா சந்திப்பு முதல் அமைந்தகரை வரை 9 சிக்னல்களை கடந்து செல்லும் பிரமாண்ட மேம்பாலம்; ரூ.300 கோடியில் கட்டப்படுகிறது

ஈ.வெ.ரா.சாலை ராஜா முத்தையா சந்திப்பு முதல் அமைந்தகரை வரை
 
 9 சிக்னல்களை கடந்து செல்லும்
 
 பிரமாண்ட மேம்பாலம்;
 
 ரூ.300 கோடியில் கட்டப்படுகிறது

சென்னை, நவ. 10- சென்னை நகரில் மேலும் 4 மேம்பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க அரசு நிர்வாக ஒப்புதல் அளித்து உத்தர விட்டுள்ளது. இதற்காக சாலை மேம்பாட்டுக் கழகத்தின் பொறுப்பில் உள்ள சுழற்சி நிதியை ஒரு சதவீதம் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

இதன்படி, பெரியார் ஈ.வெ.ரா.சாலையில் (பூந்தமல்லி நெடுஞ்சாலை) ராஜா முத்தையா சாலை சந்திப்பில் இருந்து அமைந்தகரை புல்லா அவென்யூ சந்திப்பு வரை பிரமாண்ட பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 9 சிக்னல் சந்திப்புகளை கடந்து செல்லும் வகையில் இது அமையும்.

பிரமாண்டமாக கட்ட திட்டமிடப்பட்டுள்ள இந்த மேம்பாலத்துக்கு ரூ.300 கோடி செலவு ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நவீன முறையில் இது அமைக்கப்படும்.

கொளத்தூர் அருகில் இரட்டை ஏரி பகுதியில் பெரம்பூர், செங்குன்றம் சாலை சந்திப்பில் ரூ.50 கோடி செலவில் மேம்பாலம் அமைத்தல், ஜி.எஸ்.டி. சாலை யில் பல்லாவரத்தில் சந்தை சாலை மற்றும் குன்றத்தூர் சாலை சந்திப்புகளை இணைத்து மேம்பாலம் கட்டுவது. இதன் மதிப்பீடு ரூ.65 கோடி.

இதுபோல் வேளச்சேரி விஜயநகரம் சந்திப்பில் தரமணி சாலை, தாம்பரம் வேளச்சேரி சாலை மற்றும் வேளச்சேரி புற வழிச்சாலைகள் இணையும் இடத்தில் ரூ.50 கோடியில் மேம்பாலம் அமைப்பது. ஆகியவற்றுக்கான அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இந்த 4 பாலங்களின் மொத்த செலவு ரூ.465 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

 

விளம்பர பேனர் அகற்றும் நடவடிக்கை: சிறப்பு சட்டம் இப்போது இல்லை

Print PDF

தினமணி           10.11.2010

விளம்பர பேனர் அகற்றும் நடவடிக்கை: சிறப்பு சட்டம் இப்போது இல்லை

சென்னை, நவ. 9: விளம்பர பேனர்களை அகற்றுவது தொடர்பாக அடுத்த சட்டப் பேரவைக் கூட்டத்தில்தான் சிறப்பு சட்டம் இயற்ற முடியும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்கள் உள்ளிட்ட விளம்பர பேனர்களை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அகற்ற சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி டிராபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, விளம்பர பேனர்களை அகற்றுவது தொடர்பாக நவம்பரில் நடைபெறும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் சிறப்பு சட்டம் இயற்றப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது.

இந்த நிலையில், அந்த வழக்கு நீதிபதிகள் டி. முருகேசன், வினோத் கே சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வில்சன் கூறியது:

விளம்பர பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், இந்த குறுகிய கால சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் ஏற்கெனவே தெரிவித்தபடி சிறப்பு சட்டத்தை இயற்ற முடியவில்லை. அந்தச் சட்டம் அடுத்து நடைபெறவுள்ள சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் கொண்டுவரப்பட உள்ளது என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள் விளம்பர பேனர்களை அகற்றுவது உள்ளிட்டவை தொடர்பாக அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என்று கூறினர். வழக்கு விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

 


Page 314 of 841