Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

நகராட்சி, பேரூராட்சிகளில் அரசின் சாதனைகளை விளக்கும் சிறப்பு படக்காட்சி காட்ட ஏற்பாடு

Print PDF

தினகரன்                10.09.2010

நகராட்சி, பேரூராட்சிகளில் அரசின் சாதனைகளை விளக்கும் சிறப்பு படக்காட்சி காட்ட ஏற்பாடு

திண்டுக்கல், நவ. 10: அரசின் சாதனைகளை விளக்கும் சிறப்பு படக்காட்சி நகராட்சி, பேரூராட்சிகளில் காட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் அரசின் சாதனைகளை விளக்க செய்தி மக்கள் தொடர்பு அலுவலக வாகனம் மூலம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமப்பகுதிகளில் குறும்படங்கள் காட்டப்படுகின்றன. இதன் தொடர் நடவடிக்கையாக நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இவற்றை ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல்வர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியின் சாதனைகள், தஞ்சை பெரியகோயில் ஆயிரமாவது ஆண்டு விழா, தாயுமானவர்(திரைப்பட நலவாரியம்) போன்ற குறும்படங்கள் காட்டப்பட உள்ளன.

நவ.10ம் தேதி காளனம்பட்டி, புதூர், 11ம் தேதி சத்திரப்பட்டி, கருங்கல்பட்டி, 12ம் தேதி மேல்கரைபுதூர், ஆவாரம்பட்டி, 15ம் தேதி சுக்காம்பட்டி, கொண்டசமுத்திரப்பட்டி, 16ம் தேதி ரெட்டியபட்டி, சேடபட்டி ஆகிய இடங்களிலும், 18ம் தேதி முதல் தாடிக்கொம்பு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான அய்யம்பாளையம், தாயார்புரம், 19ம் தேதி பூசாரிகவுண்டனூர், சித்தையகவுண்டனூர், 20ம் தேதி உண்டார்பட்டி, பள்ளப்பட்டி, 21ம் தேதி பெரியமல்லனம்பட்டி, சின்னமல்லனம்பட்டி, 22ம் தேதி காமாட்சிபுரம், தாடிக்கொம்பு, 23ல் பிறகரை, இன்னாசிபுரம், 24ம் தேதி மைக்கேல்பாளையம், மூக்கையகவுண்டனூர் ஆகிய இடங்களிலும் காட்டப்பட உள்ளன.

இதே போல் நவ.25ம் தேதி வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளலான நாகம்பட்டி, பெருமாள்கவுண்டன்பட்டி, 26ல் மாரம்பாடி, சின்னமுத்தனம்பட்டி, 29ம் தேதி மல்வார்பட்டி, சவேரியார்பட்டி, 30ம் தேதி ஸ்ரீராமபுரம், மண்டபம்புதூர் ஆகிய இடங்களிலும் சிறப்புப் படக்காட்சிகள் காட்டப்படுகின்றன.

இதன்மூலம் அரசின் நலத்திட்ட உதவிகள், சாதனைகள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம் என்று கலெக்டர் வள்ளலார் தெரிவித்துள்ளார்.

 

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் உள்ளாட்சி தினவிழா

Print PDF

தினகரன்                     08.11.2010

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் உள்ளாட்சி தினவிழா

ஸ்ரீவைகுண்டம், நவ.8: ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் உள்ளாட்சி தினவிழா நடந்தது. தலைவர் கந்த சிவசுப்பு தலைமை வகித்தார். கவுன்சிலர் பெருமாள் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் மணி வரவேற்றார். தொடர்ந்து குமரகுருபர சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆதி குமரகுருபர சுவாமிகள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கள் பங்கேற்ற பேச்சு மற்றும் கவிதைப் போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு தலைவர் கந்தசிவசுப்பு பரிசுகளை வழங்கினார். தலைமை எழுத்தர் வேலுச்சாமி நன்றி கூறினார்.

Last Updated on Monday, 08 November 2010 05:41
 

கல்யாண் மாநகராட்சியில் சிவசேனா மேயர் பதவியேற்பார்

Print PDF

தினகரன்                 08.11.2010

கல்யாண் மாநகராட்சியில் சிவசேனா மேயர் பதவியேற்பார்

கல்யாண், நவ.8: கல்யாண்&டோம்பிவலி மாநகராட்சியில் சிவசேனா கட்சி தனது பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த நிலையில், தமது கட்சி பெரும்பான்மையை நிரூபித்து காட்டும் என தாம் உறுதியாக நம்புவதாக சிவசேனா செயல் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த கல்யாண்&டோம்பிவலி மாநகராட்சி தேர்தலில் சிவசேனாவுக்கும் ராஜ்தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனாவுக்கும் இடையே கடும் போட்டி காணப்பட்டதால் இந்த தேர்தல் மாநிலம் முழுவதும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியானபோது எந்த கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

107 உறுப்பினர்களைக் கொண்ட இந்த மாநகராட்சியில் மெஜாரிட்டியை நிரூபிக்க 54 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதில் கூட்டணி கட்சிகளான சிவசேனாவும் பா.ஜ.வும் 40 இடங்களை (சேனா&31, பா.ஜ. 9) கைப்பற்றின. நவ நிர்மாண் சேனா 27 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் வந்தது. காங்கிரஸ் 15 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் 14 இடங்களிலும் வெற்றி பெற்றன. சுயேட்சைகள் 11 பேர் வெற்றி பெற்றனர்.

இதை வைத்து பார்க்கும்போது, சிவசேனா&பா.. கூட்டணிக்கு 11 சுயேட்சைகளும் ஆதரவு அளித்தாலும்கூட மொத்த எண்ணிக்கை 51&தான் வருகிறது. மெஜாரிட்டிக்கு இன்னும் 3 இடங்கள் தேவை.

நவ நிர்மாண் சேனாவுக்கு மேயர் பதவி கிடைக்க வேண்டுமானால் காங்கிரஸ்&தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் ஆதரவை பெற வேண்டும். ஆனால் மாநகராட்சியில் எதிர்கட்சி வரிசையில் அமரப்போவதாக காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்து இருக்கிறது.

இந்த நிலையில் சிவசேனா நிச்சயமாக மேயர் பதவியை கைப்பற்றும் என உத்தவ் தாக்கரே கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், "கல்யாணில் சிவசேனா மேயர்தான் பதவியேற்பார். மேயர் தேர்தலில் எங்கள் கட்சி உறுப்பினர்கள் வெற்றிபெற்று காட்டுவார்கள். மெஜாரிட்டியை எப்படி நிரூபிக்கப் போகிறோம் என்பதை வரும் 12ம் தேதி பார்ப்பீர்கள்Ó என்றார்.

ஆனால் இந்த விவகாரத்தில் சிவசேனாவுக்கும் தேசியவாத காங்கிரசுக்கும் இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டு இருப்பதாக உத்தவ் தாக்கரேக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. வாக்கெடுப்பின்போது தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் அதில் பங்கேற்கமாட்டார்கள் என்றும் எனவே மீதமுள்ள உறுப்பினர்களில் சிவசேனாவுக்கு மெஜாரிட்டி கிடைத்துவிடும் என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.

தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்றால் மீதமுள்ள 93 உறுப்பினர்களில் மெஜாரிட்டிக்கு 47 பேரின் ஆதரவு இருந்தால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated on Monday, 08 November 2010 05:38
 


Page 317 of 841