Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மழைபாதிப்பு சமாளிக்க உடனடி நடவடிக்கை

Print PDF

தினகரன்                   08.11.2010

மழைபாதிப்பு சமாளிக்க உடனடி நடவடிக்கை

சென்னை, நவ. 8: மழை பாதிப்புகளை சமாளிக்க அனைத்து ஏற்பாடுகளுடன் சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது என்று துணை முதல்வர் மு..ஸ்டாலின் தெரிவித்தார்.

துணை முதல்வர் மு..ஸ்டாலின் நேற்று மேயர் மா.சுப்பிரமணியன், மாநகர ஆணையர் கார்த்திகேயன், வி.எஸ்.பாபு, எம்.எல்.., ஆகியோருடன் சென்று, பெரம்பூர் பேரக்ஸ் சாலை மாநகராட்சி நிவாரண மையத்தில் தயாரிக்கப்படும் உணவையும், அதன் பிறகு கணேசபுரத்தில் மோட்டார் பம்புகள் மூலம் மழைநீர் அகற்றும் பணியினையும் பார்வையிட்டார்.

பின்னர் துணை முதல்வர் கூறியதாவது:

தாழ்வான பகுதிகள் மற்றும் சுரங்கப் பாதைகளில் தேங்கும் மழைநீரை அகற்ற 150 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக 53 எச்.பி. திறன் கொண்ட 7 மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்படுகிறது. இது தவிர மோட்டார் கட்டு மரங்கள் 8, 4 ரப்பர் படகுகள் தயார் நிலையில் உள்ளன. படாளம், பேசின்பாலம், சிந்தாதிரிப்பேட்டை, கோபாலபுரம் ஆகிய 4 இடங்களில் நிரந்தர மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 30 மருத்துவக் குழுக்கள் மற்றும் 10 நடமாடும் மருத்துவக் குழுக்கள் என 40 குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மாடன் ரொட்டி தயாரிக்கும் நிறுவனத்திடம் எடுத்துரைக்கப்பட்டு, 3 வேளைகளிலும் தேவைப்படும் அளவிற்கு ரொட்டிகள் வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கூவம் ஓரம் உள்ள மக்களுக்கு வழங்க 2 ஆயிரம் ரொட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டு, வழங்கப்படுகிறது.

பொதுமக்கள் மரங்களின் அருகில் ஜாக்கிரதையாக செல்லுமாறும், வாகனங்களை நிறுத்திவைக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில் சென்னையில் 30 மரங்கள் விழுந்துள்ளன. அவை மாநகராட்சி மூலம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. 20 நவீன மரம் வெட்டும் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு துணை முதல்வர் தெரிவித்தார்.

 

அரவக்குறிச்சியில் உள்ளாட்சி தின விழா

Print PDF

தினமணி                 04.11.2010

அரவக்குறிச்சியில் உள்ளாட்சி தின விழா

அரவக்குறிச்சி, நவ. 3: அரவக்குறிச்சி பேரூராட்சி குமராண்டான்வலசு பகுதியில் ஒருங்கிணைந்த துப்புரவு முகாம், உள்ளாட்சி தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அரவக்குறிச்சி பேரூராட்சித் தலைவர் ம. அண்ணாதுரை தலைமை வகித்தார். துணைத் தலைவர் பாம்பே காதர்மைதீன், செயல் அலுவலர் சு. உமாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

துப்புரவு மேற்பார்வையாளர் ச. மனோகரன் மேற்பார்வையில், குமராண்டான்வலசு பகுதியில் துப்புரவுப் பணியாளர்கள் குப்பைகளை அகற்றினர். அதை பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் பார்வையிட்டனர். பேரூராட்சி உறுப்பினர் சகுந்தலாதேவி, திருக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, கணக்குப்பிள்ளைபுதூர் அரசு தொடக்கப் பள்ளியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ம. அண்ணாதுரை திருக்குறள் புத்தகம், பேனா, பென்சில்களை வழங்கினார். பேரூராட்சி உறுப்பினர் கே. சிவசெல்வி, பள்ளித் தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் கணக்கெடுப்பு

Print PDF

தினமணி                    04.11.2010

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் கணக்கெடுப்பு

திருவள்ளூர், நவ. 3: திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 5, 6, 25 ஆகிய வார்டுகளில் வறுமைக் கோட்டுக்குகீழ் உள்ளவர்கள் 292 பேர் கணக்கெடுப்பு செய்து நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவள்ளூர் நகர்மன்றக் கூட்டம் புதன்கிழமை திருவள்ளூர் நகர்மன்றத் தலைவர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் நகராட்சி துணைத் தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார். நகராட்சி ஆணையர் முத்துராமேஸ்வரன் முன்னிலை வகித்தார்.

இதில் திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட ஈச்சந்தோப்பு, ஈக்காடு ரோடு, தகினிகோட்டை தெரு ஆகிய பகுதிகளில் உள்ள 81 பேர், 6-வது வார்டில் அகரத் தெரு, ஆசூரித் தெரு, வடக்கு ராஜவீதி ஆகிய தெருக்களில் உள்ள 59 பேர், 25-ம் வார்டில் உள்ள சித்தி விநாயகர் கோயில் தெரு, எஸ்கேபி நகர், தாதுகான்பேட்டை, பாரதியார் தெரு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 152 பேர் உள்பட 292 பேர் வறுமைக் கோட்டுக்குகீழ் உள்ளவர்கள் என கணக்கெடுப்பு செய்து பட்டியல் தயாரிக்கப்பட்டு நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து பத்தியால்பேட்டை பகுதியில் பல ஆண்டுகளாக மண் சாலையாக உள்ளதால் அப்பகுதியில் பொதுமக்கள் நடக்கவே சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் அப்பகுதியில் உள்ள தெருக்களில் சிமென்ட் சாலைகள் அமைக்கவும், நகராட்சி அலுவலக சுற்றுச் சுவரில் அழகிய ஓவியங்கள் வரைய ரூ. 70 ஆயிரம் நிதி ஒதுக்கி தீர்மானமும், பஜார் வீதி, வடக்கு குளக்கரை வீதி மற்றும் சிவன் கோயில் அருகிலும் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்க ரூ. 2.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகராட்சி பொறியாளர் சாய்ராம் நன்றி கூறினார்.

 


Page 318 of 841