Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

புன்செய்புகளூர் பஞ்.,ல் உள்ளாட்சி தினவிழா

Print PDF

தினமலர்           04.11.2010

புன்செய்புகளூர் பஞ்.,ல் உள்ளாட்சி தினவிழா

வேலாயுதம்பாளையம்: புன்செய் புகளூர் டவுன் பஞ்சாயத்தில் உள்ளாட்சி தினவிழா கொண்டாடப்பட்டது. புன்செய் புகளூர் டவுன் பஞ்சாயத்தில் நடந்த உள்ளாட்சி தினவிழாவுக்கு தலைவர் கல்யாணி தலைமை வகித்தார். துணை தலைவர் அண்ணாவே ல், செயல் அலுவலர் குலோப்துங்கன் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் மற்றும் டவுன் பஞ்சாயத்து பணியாளர்கள் பங்கேற்றனர். டவுன் பஞ்சாயத்தின் சுகாதாரத்தை பாதுகாக்கும்பொருட்டு தீபாவளியன்று புகை மாசுகாற்று மற்றும் குப்பை காரணமாக ஏற்படும் அலர்ஜி குறி த்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குப்பையில்லா நகராக பராமரிக்க உள்ளாட்சி தின விழாவில் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

 

பணியை சரியாக செய்யாததால் 3 மாநகராட்சி பொறியாளர்கள் சஸ்பெண்ட்

Print PDF

தினமலர்                 04.11.2010

பணியை சரியாக செய்யாததால் 3 மாநகராட்சி பொறியாளர்கள் சஸ்பெண்ட்

மதுரை : மதுரையில் மழைநீர் வடிகால் வாய்க்காலை சரியாக தூர் வார நடவடிக்கை எடுக்காததால், 3 உதவி பொறியாளர்கள் "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். மதுரையில் பாதாள சாக்கடை பணிகள் 90 சதவீதம் முடியும் தருவாயில் இருக்கின்றன. பணிகள் முழுமையாக முடிந்த இடங்களில், திறவு சாக்கடைகள் மூடப்பட்டு, பாதாள சாக்கடையுடன் வீடுகளுக்கு இணைப்பு தரப்படுகிறது. இப்பணிகளும் முடிந்து விட்டால், சாலைகளில் மழை நீர் செல்ல வழி இருக்காது. இதற்காகவே, மத்திய அரசின் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ், மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்படுகிறது. இப்பணிகள் இன்னும் இழுபறியாக இருப்பது, இன்னொரு பிரச்னையை கிளப்பி உள்ளது. குழாய், வேலையாள் கூலி போன்றவற்றுக்கு செலவழிக்க தயங்கும் சிலர், பாதாள சாக்கடை இணைப்பு பெறாமல், வீட்டு கழிவு நீரை மழைநீர் வடிகாலுக்குள் விட்டுள்ளனர். இதனால் சில பகுதிகளில் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், பல தெருக்களில் மழைநீர் வடிகாலில் குப்பை, மணல் சேர்ந்து, அடைப்பு ஏற்படுத்துகிறது. எனவே, மழைநீர் வடிகால் வாய்க்காலில் கழிவு நீரை விடுவோரை கண்டுபிடிக்கவும், வாய்க்காலை தூர் வாரி பராமரிக்க வேண்டும் எனவும் உதவி பொறியாளர்களுக்கு சென்ற வாரம் மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் உத்தரவிட்டார். இந்நிலையில், தமிழ்ச்சங்கம் ரோடு, மதுரை கோட்ஸ் பாலத்தின் கீழ் பகுதி ஆகிய இடங்களில் மாநகராட்சிகள் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்பகுதிகளில் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் தூர் வாரப்படாமல் இருந்தன. எனவே, சம்பந்தப்பட்ட வார்டு உதவி பொறியாளர்களான பெரியசாமி, திருஞானசம்பந்தம் ஆகியோரை கமிஷனர் "சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார். இதே போல், தவிட்டுச்சந்தை, காமாஜர் சாலை பகுதிகளில் சேதமடைந்திருந்த சாலைகள் மராமத்து செய்யப்படாமல் இருந்தது. பணியில் அசட்டையாக இருந்ததாகக் கூறி, உதவி பொறியாளர் விஜயகுமார் என்பவரை கமிஷனர் "சஸ்பெண்ட்' செய்தார்.

 

உள்ளாட்சி தினவிழா விளையாட்டு போட்டி வென்றோருக்கு பரிசு

Print PDF

தினகரன்              04.11.2010

உள்ளாட்சி தினவிழா விளையாட்டு போட்டி வென்றோருக்கு பரிசு

பெரம்பலூர், நவ. 4: உள்ளாட்சி தினவிழாவையொட்டி பெரம்பலூர் நகராட்சியில் கவுன்சிலர், அலுவலர், துப்புரவு பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டி நடந் தது.

தமிழக உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், துணை முதல்வருமான ஸ்டாலின் உத்தரவுப்படி ஒவ்வொரு ஆண்டும் நவம்பர்மாதம் உள்ளாட்சி தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

பெரம்பலூர் நகராட்சியில் உள்ளாட்சி தினவிழா கடந்த 1ம் தேதி நடந்தது. இதையொட்டி சுகாதார விழி ப்புணர்வு பேரணி, துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வழங்குதல், மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று நக ராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள், துப்புரவு பணி யாளர் களுக்கு விளையாட்டு போட்டி மாவட்ட விளை யாட்டு மைதானத்தில் நடந் தது. போட்டிகளை நகராட்சி தலைவர் இளையராஜா துவக்கி வைத்தார். துணைத்தலைவர் முகுந்தன், ஆணையர் சுரேந்திர ஷா முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் அன்புதுரை, கருணா நிதி, ஜெயக்குமார், ரமேஷ் பாண்டியன், கண்ணகி, சுசீலா, பொற்கொடி கலந்து கொண்டனர்.

ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், தட்டு எறிதல், மியூசிக்கல் சேர், கயிறு இழுத்தல் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களு க்கு பரிசு வழங்கப்பட்டது. தீபாவளி பண்டிகையொட்டி நகராட்சியில் பணிபுரிகிற துப்புரவு பணியாளர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது. v

 


Page 319 of 841