Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

நகராட்சி பணியாளர் 375 பேருக்கு சீருடை

Print PDF

தினகரன்                 04.11.2010

நகராட்சி பணியாளர் 375 பேருக்கு சீருடை

கும்பகோணம், நவ.4: தீபா வளி பண்டிகையையொட்டி கும்பகோணம் நகராட்சியில் பணியாளர்களுக்கு ரூ. 2.87 லட்சம் மதிப்பில் சீருடைகள் வழங்கப்பட்டன.

கும்பகோணம் நகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களில் 182 ஆண் கள், 123 பெண்கள், 28 வாகன ஓட்டுநர்கள், 22 துப் புரவு மேற்பார்வையாளர் கள், 11 அலுவலக உதவியாளர்கள், 9 மகப்பேறு உதவியாளர்கள் உட்பட 375 பேரு க்கு ரூ. 2.37லட்சம் மதிப்பில் ச¦ருடைகளும், தையற்கூலி ரூ.50 ஆயிரத்தையும் நேற்று நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர் தமிழழகன் வழங்கினார். துணைத் தலைவர் தர்மபாலன், உறுப்பினர்கள் சுந்தரபாண்டியன், வாசுதேவன், காமேஷ், கணேசன், ஆணையர் வரதராஜன், நகர்நல அலுவலர் சுப்பிரமணி, நகரமைப்பு அலுவலர் பாஸ்கரன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

மழை நீர் வடிகால், சாலைகளை பராமரிக்காத மாநகராட்சி பொறியாளர்கள் 3 பேர் சஸ்பெண்ட்

Print PDF

தினகரன்                    04.11.2010

மழை நீர் வடிகால், சாலைகளை பராமரிக்காத மாநகராட்சி பொறியாளர்கள் 3 பேர் சஸ்பெண்ட்

மதுரை, நவ. 4: மழை நீர் வடிகால் மற்றும் சாலைகளை சரியாக பராமரிக்காத மாநகராட்சி பொறியாளர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மதுரையில் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடியாமல் தேங்குகிறது. மழை நீர் தேங்காமல் வடிகால்களை தூர்வாரி சுத் தம் செய்யும்படி அனைத்து வார்டு பொறியாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டது. இதன்படி சுத் தம் செய்யப்பட்டுள்ளதா? என நேற்று ஆணையா ளர் செபாஸ்டின், தலைமை பொறியாளர் சக்தி வேல் ஆய்வு நடத்தி னர்.

இதில் தமிழ் சங்கம் சாலை மற்றும் மதுரா கோட்ஸ் மேம்பாலத் தின் கீழ் பகுதி ஆகிய இடங்களில் வடிகால் கள் தூர் வாரி சுத் தம் செய்யப்படாமல் மழை நீர் தேங்கி நின்றது. எனவே அந்த வார்டு உதவி பொறியாளர்கள் பெரியசாமி, திருஞானசம்பந்தம் ஆகியோர் சஸ் பெண்ட் செய்யப்பட்டனர்.

இதே போல் மழையால் சாலைகள் சேதமடைந்து குழிகள் விழுந்துள்ளன. இந்த குழிகளை மூடி மராமத்து பணி மேற்கொள்ளும்படி உத்தரவிடப்பட்டு இருந்தது. இதனை ஆய்வு செய்ததில் தவிட்டு சந்தை, காமராஜர் சாலை ஆகிய பகுதி சாலைகளில் குழி மூடப்படாமல் அலங்கோலமாக கிடந்தது. எனவே சாலை மராமத்து பணியை சரியாக மேற்கொள்ளாத இளநிலை பொறியாளர் விஜயகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவுகளை ஆணையாளர் செபாஸ்டின் பிறப்பித் தார்.

வடிகால்களில் மழைநீர் வடியாமல் தேங்குவது குறித்தும், மழையால் சாலைகள் பழுதடைந்து குழிகளாகி இருப்பது குறித்தும் கடந்த வாரம் தினகரன் பத்திரிகையில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து மாநகராட்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

 

ரூ50 லட்சத்தில் அமைக்கப்படுகிறது அண்ணா நகரில் 2 கி.மீ. தூரம் சைக்கிளில் செல்ல தனிப்பாதை ஜனவரியில் திறப்பு

Print PDF

தினகரன்             04.11.2010

ரூ50 லட்சத்தில் அமைக்கப்படுகிறது அண்ணா நகரில் 2 கி.மீ. தூரம் சைக்கிளில் செல்ல தனிப்பாதை ஜனவரியில் திறப்பு

சென்னை, நவ.4: சைக்கிளில் செல்பவர்களுக்காக அண்ணா நகரில் தனிப்பாதை ஜனவரியில் திறக்கப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி மேயர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ், கடந்த 4 ஆண்டுகளில் 15 லட்சத்து 47,242 சைக்கிள்கள் ரூ358 கோடி செலவில் பிளஸ்&1 வகுப்பில் பயின்ற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு முதல்வர் கருணாநிதி வழங்கியுள்ளார்.

இந்த ஆண்டு 5 லட்சத்து 68,359 மாணவர்களுக்கு இந்த சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். சென்னையில் 7,203 மாணவர்களுக்கு இன்று சைக்கிள்கள் வழங்கப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் சைக்கிளில் செல்வதற்காக தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதே போன்று சியான் நகரில் சைக்கிள்களை வைப்பதற்காகவே ரயில்களில் கடைசியாக தனிப்பெட்டி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மூலம் முதல்முறையாக அண்ணாநகரில் 14 கி.மீ நீளத்துக்கு சைக்கிளில் செல்ல தனிப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதில் முதல்கட்டமாக அண்ணாநகரில் 5வது அவென்யூ மற்றும் 6வது அவென்யூவில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தனிப்பாதை சுமார் 2 கி.மீ நீளத்திற்கு ரூ50 லட்சத்தில் அமைக்கப்படுகிறது. இந்த பணி வரும் ஜனவரி முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு திறக்கப்படும்.

அதே போன்று மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரையிலுள்ள சர்வீஸ் சாலையில் சுமார் 3 கி.மீ நீளத்திற்கு சைக்கிள் பாதை கட்டுதல், இயக்குதல், பின் ஒப்படைத்தல் என்கிற முறையில் ஒப்பந்தங்கள் கோரப்பட்டு, பரிசீலனையில் உள்ளது. இந்த திட்டமும் மிக விரைவில் செயல்பாட்டுக்கு வரும். இது போன்ற நடவடிக்கைகள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். இவ்வாறு மேயர் பேசினார்.

 


Page 320 of 841