Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

நெல்லை மாநகராட்சியில் ரூ. 25 கோடிரோடு பணிக்கு டெண்டர் தேதியை நீட்டித்தது

Print PDF

தினமலர்                03.11.2010

நெல்லை மாநகராட்சியில் ரூ. 25 கோடிரோடு பணிக்கு டெண்டர் தேதியை நீட்டித்தது

திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சியில் ரோடு பணிக்கு டெண்டர் போடுவதில் தகராறு ஏற்பட்டதையடுத்து டெண்டர் தேதியை நாளை வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.சட்டசபைத்தேர்தல் நெருங்குவதையொட்டி தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சிப்பகுதிகளில் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழுதடைந்த ரோடுகளை சீர்செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நெல்லை மாநகராட்சிக்கு 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பல வார்டுகளில் சிமென்ட், தார் ரோடுகள் அமைக்கும் பணிகளும் இதில் அடக்கம்.இப்பணிக்கு ஒப்பந்ததாரர்கள் டெண்டர் போடுவதற்கு கடந்த 1ம்தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. பொதுவாக அதிக மதிப்பீட்டிலான பணிகளுக்கு டெண்டர் போடும் ஒப்பந்ததாரர்கள் தங்களுக்குள் "சிண்டிகேட்' அமைப்பது வழக்கம். குறிப்பிட்ட ஒரு பணிக்கு பல ஒப்பந்ததாரர்கள் டெண்டர் பாரம் வாங்கினாலும் ஆளுங்கட்சி ஆதரவு பெற்ற ஓரிருவர் மட்டுமே டெண்டர் போடுவர். அதில் ஒருவருக்கு பணி அளிக்கப்படும்.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி பேதமின்றி அனைவரும் தங்களுக்குள் "பேசி' முடித்துக்கொள்வர்.தற்போது சிமென்ட் விலை உச்சத்தில் இருப்பதால் சிமென்ட் ரோடு அமைக்கும் பணியை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் தார் ரோடு அமைக்கும் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் சிமென்ட் ரோடு பணியை சேர்த்து செய்ய வேண்டும் என அதிகாரிகள் வற்புறுத்தி வருகின்றனர்.நெல்லை மாநகராட்சி அலுவலகத்திற்கு சம்பவத்தன்று ஆளும்கட்சி கவுன்சிலர் காரில் வந்த ஒருவர் முக்கிய வி..பி., ஒருவரின் சிபாரிசுப்படி தார் ரோடு பணிக்கு மட்டும் டெண்டர் போட்டுள்ளார். இதனால் அவருக்கும், ஏற்கனவே டெண்டர் போட்ட மாநகராட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவரின் ஆதரவாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வேறு சிலரும் டெண்டர் போட விடாமல் தடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கூறப்பட்டது. அதிகாரிகள் போலீசுக்கு தகவல் அளித்தனர். இதுதொடர்பாக மேலிடத்திற்கு தகவல் பறந்தது. இதையடுத்து நெல்லை மாநகராட்சியில் மட்டும் ரோடு பணிக்கு டெண்டர் அளிக்க 4ம்தேதி (நாளை) வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Last Updated on Thursday, 04 November 2010 04:15
 

நகராட்சி கமிஷனருக்கு கோரிக்கை

Print PDF

தினமலர்                03.11.2010

நகராட்சி கமிஷனருக்கு கோரிக்கை

உடுமலை: உடுமலை நகரில், குடியிருக்கும் பகுதியிலிருந்து வெகு தொலைவில் அமைக்கப்பட்ட ஓட்டுசாவடிகளில் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதை மாற்றியமைக்க வேண்டும் என அ.தி.மு.., கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அ.தி.மு.., நகர செயலாளர் சண்முகம் நகராட்சி கமிஷனருக்கு அனுப்பியுள்ள மனு:
உடுமலை நகரில் வரும் சட்டசபை தேர்தலுக்காக அமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடிகளில் சில வாக்காளர்கள் குடியிருக்கும் பகுதியிலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ளது. 184 பாகத்திலுள்ள வீதியில் உள்ள வாக்காளர்களுக்கு ஏரிப்பாளையம் தொடக்க பள்ளி ஓட்டுச்சாவடியாக உள்ளது. இந்த பள்ளி வாக்காளர் குடியிருப்பில் இருந்து வெகு தொலைவிலும், போதிய போக்குவரத்து வசதி இல்லாமலும் உள்ளது. இதே போல், பாகம் எண் 217 அமீர் மிர் கவுஸ், அமீர் லே-அவுட், கங்காதரன் லே-அவுட், வாக்காளர்களுக்கு டி.வி., பட்டணம் ஓட்டுச்சாவடியிலிருந்து மாற்றி ராமசாமி நகர் பள்ளி சாவடியில் சேர்க்க வேண்டும்.ருத்ரப்ப நகர் 1 முதல் 9 வீதி வரை உள்ள வாக்காளர்களுக்கு ருத்தரப்பநகர் பள்ளியிலும், பழைய அக்ரஹாரம் பகுதியினருக்கு எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியிலும், சின்னசாமி லே-அவுட், குமரன் லே-அவுட், கொங்குரார் லே-அவுட், வாக்காளர்களுக்கு டி.வி., பட்டணம் பள்ளி சாவடியில் ஓட்டளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டி.வி., பட்டணம் 1,2,3,4 பகுதி வாக்காளர்களுக்கு பாரதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை ஓட்டுச்சாவடியை மாற்றி, அருகிலுள்ள டி.வி., பட்டணம் துவக்கப்பள்ளி சாவடியில் சேர்க்க வேண்டும். குடியிருப்பு பகுதியின் அருகில் ஓட்டுச்சாவடி அமைவதால் வாக்காளர்கள் ஓட்டளிக்க எளிதாக அமையும். புதிய வாக்காளர் சேர்க்கைக்கான காலக்கெடுவையும் நீட்டிக்க வேண்டும்', இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Last Updated on Thursday, 04 November 2010 04:14
 

தருமபுரி நகராட்சியில் உள்ளாட்சி தின விழா

Print PDF

தினமணி             02.11.2010

தருமபுரி நகராட்சியில் உள்ளாட்சி தின விழா

தருமபுரி, நவ. 1: தருமபுரி நகராட்சியில் திங்கள்கிழமை உள்ளாட்சி தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, நகர்மன்றத் தலைவர் டி.சி.பி.ஆனந்தகுமார ராஜா தலைமை வகித்தார். ஆணையாளர் அண்ணாதுரை, பொறியாளர் ஜெகதீஸ்வரி, நகர்மன்ற உறுப்பினர்கள் வி.முருகேசன், இரா.வேணுகோபால், மாது, ஜெயந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து, நகர்மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்ற உறியடித்தல், இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

 


Page 321 of 841