Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

உள்ளாட்சி தின விழா

Print PDF

தினமணி              02.11.2010

உள்ளாட்சி தின விழா

மானாமதுரை, நவ. 1: மானாமதுரையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் உள்ளாட்சி தின விழா கொண்டாடப்பட்டது.

இதையொட்டி பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதில் செயின்ட் ஜோசப் மெட்ரிக். பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

பள்ளி வளாகத்திலிருந்து புறப்பட்ட இப் பேரணியை பேரூராட்சித் தலைவர் ராஜாமணி தொடங்கி வைத்துப் பேரணியில் பங்கேற்றார். துணைத் தலைவர் ஜோசப்ராஜன், செயல் அலுவலர் மருது, கவுன்சிலர் சோமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேரூராட்சி அலுவலகத்தில் பேரணி முடிவடைந்து. அலுவலகத்தில் மாணவ, மாணவிகளுக்கு உள்ளாட்சியின் சிறப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து சுகாதார ஆய்வாளர் தங்கத்துரை விளக்கிக் கூறினார்.

Last Updated on Tuesday, 02 November 2010 11:20
 

கொடைக்கானலில் உள்ளாட்சிகள் தின விழா

Print PDF

தினமணி                   02.11.2010

கொடைக்கானலில் உள்ளாட்சிகள் தின விழா

கொடைக்கானல், நவ. 1: கொடைக்கானல் நகராட்சி சார்பில் உள்ளாட்சிகள் தின விழா நகர்மன்ற வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் முகமது இப்ராஹிம் தலைமை வகித்தார். ஆணையாளர் ராஜன் முன்னிலை வகித்தார். நகராட்சி பொறியாளர் ராஜாராம் வரவேற்றார். கொடைக்கானலில் நடைபெற்ற சாதனைகளைப் பற்றி நகர்மன்றத் தலைவர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பேசினர்.

நிகழ்ச்சியில் நகர்மன்றத் துணைத் தலைவர் செல்லத்துரை, உறுப்பினர்கள் பாலசுப்பிரமணி, சின்னு, தீனதயாளன், ராஜ்குமார், முஸ்தபா, நாகராஜ், ஆல்பர்ட், ஆஷா ரவீந்திரன், சலேத் மேரி, தன்சிலா பானு, மேரி கிருஷ்ணன் மற்றும் நகராட்சி அதிகாரிகள், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

பள்ளபட்டி பேரூராட்சியில் உள்ளாட்சி தின விழா

Print PDF

தினமணி            02.11.2010

பள்ளபட்டி  பேரூராட்சியில் உள்ளாட்சி தின விழா

அரவக்குறிச்சி, நவ. 1: பள்ளபட்டி பேரூராட்சியில் உள்ளாட்சி தின விழாவை முன்னிட்டு மரக் கன்றுகள் நடும் விழா, கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பற்றிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பள்ளபட்டி பேரூராட்சித் தலைவர் டி.எம். தோட்டம் பசீர் அகமது தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜே.கே. அப்துல்பாரி, பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.பி. சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரூராட்சி தலைவர் தோட்டம் பசீர்அகமது தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டு, பேரூராட்சியில் உள்ள 18 வார்டு பகுதிகளிலிலும் கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பற்றிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன

 


Page 322 of 841