Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

வெள்ளக்கோவிலில் உள்ளாட்சி தின விழா

Print PDF

தினமணி            02.11.2010

வெள்ளக்கோவிலில் உள்ளாட்சி தின விழா

வெள்ளக்கோவில், நவ. 1: வெள்ளக்கோவில் (மூன்றாம் நிலை) நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ளாட்சிகள் தினவிழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு நகர்மன்றத் தலைவர் கே.சாந்தி தலைமை வகித்தார். செயல் அலுவலர் வி.சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். இப்பகுதியிலுள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பொதுஅறிவுப் போட்டிகள் நடத்தப்பட்டு, சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

 

மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் உள்ளாட்சி தினவிழா

Print PDF

தினமணி                  02.11.2010

மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் உள்ளாட்சி தினவிழா

மேட்டுப்பாளையம், நவ. 1: மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் உள்ளாட்சி தினவிழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, நடைபெற்ற பேரணிக்கு நகரமன்ற துணைத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்து, பேரணியை துவக்கி வைத்தார். நகராட்சிப் பொறியாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.

நகர் நல அலுவலர் பிரதீப் கிருஷ்ணகுமார் வரவேற்றார். பேரணி உதகை சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்று நகராட்சி அலுவலகத்தை அடைந்தது. நகரமைப்பு அலுவலர் அன்பு, கண்காணிப்பாளர் அன்வர், சுகாதார ஆய்வாளர்கள் நல்லுசாமி, சரவணன், செல்வராஜ், செந்தில்குமார் உட்பட மகாஜன மேநிலைப் பள்ளி, மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினரும் கலந்து கொண்டனர். பேச்சு மற்றும் கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நகரமன்ற துணைத் தலைவர் ஆறுமுகம் பரிசுகளை வழங்கினார். நகராட்சி உதவியாளர் ஜெயராமன் நன்றி கூறினார்.

 

குழித்துறை நகராட்சியில் உள்ளாட்சி தின விழா

Print PDF

தினமணி             02.11.2010

குழித்துறை நகராட்சியில் உள்ளாட்சி தின விழா

மார்த்தாண்டம், நவ. 1: குழித்துறை நகராட்சியில் உள்ளாட்சி தின விழா நடைபெற்றது. விழாவுக்கு நகர்மன்றத் தலைவர் பொன். ஆசைத்தம்பி தலைமை வகித்தார். நகராட்சி பொறியாளர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர் காளிமுத்து மற்றும் நகராட்சி ஊழியர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெண்கள் மகப்பேறு நலத்திட்டத்தின் மூலம் 20 கர்ப்பிணிகளுக்கு தலா ரூ. 6000 வீதம் வழங்கப்பட்டது. நகர்மன்ற துப்புரவுப் பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.

Last Updated on Tuesday, 02 November 2010 11:16
 


Page 323 of 841