Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

திருவிதாங்கோடு பேரூராட்சியில் இலவச கால்நடை மருத்துவ முகாம்

Print PDF

தினமணி                  02.11.2010

திருவிதாங்கோடு பேரூராட்சியில் இலவச கால்நடை மருத்துவ முகாம்

தக்கலை, நவ. 1: திருவிதாங்கோடு பேரூராட்சியில் தமிழக அரசின் இலவச கால்நடை மருத்துவ முகாமை பத்மநாபபுரம் எம்எல்ஏ தியோடர் ரெஜினால்டு திங்கள்கிழமை தொடக்கிவைத்தார்.

திருவிதாங்கோடு பேரூராட்சிக்கு உள்பட்ட பரைக்கோட்டில் நடைபெற்ற இம் முகாமில் வார்டு உறுப்பினர் எம்.எம். மாஹின், கால்நடைப் பராமாரிப்புத் துறை உதவி இயக்குநர் டாக்டர் சந்திரமோகன், டாக்டர் சலீம், ஊர்த் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முகாமில், மாடுகளுக்கு சினைப் பரிசோதனை, செயற்கை முறையில் கருவூட்டல், குடல்புழு நீக்கம், ஆடு, கோழிகளுக்கு தடுப்பூசி உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

முகாமில், அழகியமண்டபம், திருவிதாங்கோடு, மணலி, விலவூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் கால்நடைகளுடன் பங்கேற்றனர்.

முன்னதாக சிறந்த முறையில் கன்றுகளைப் பராமரித்தோருக்கு தியோடர் ரெஜினால்டு எம்எல்ஏ பரிசுகள் வழங்கிக் கௌரவித்தார்.

 

சுரண்டையில் உள்ளாட்சி தின விழா

Print PDF

தினமணி               02.11.2010

சுரண்டையில் உள்ளாட்சி தின விழா

சுரண்டை, நவ. 1: சுரண்டை பேருராட்சியில் உள்ளாட்சி தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது. பேரூராட்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பேரூராட்சித் தலைவர் ப.கோமதி பழனி தலைமை வகித்தார்.

மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் எஸ்.பழனிநாடார், பேரூராட்சி துணைத் தலைவர் ப.ராமர், செயல் அலுவலர் ம.சாமுவேல் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் பேரூராட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பூவதி, வேல்சாமி, அமராவதி, மகேஷ், சீனிவாசன், பட்டுராஜ், அய்யாத்துரை, அருணாசலக்கனி, ஜெயபால், ராஜேந்திரன், கல்பனா, கார்த்திகேயினி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

 

நெல்லை மாநகராட்சியில் உள்ளாட்சி தின விழா

Print PDF

தினமணி                        02.11.2010

நெல்லை மாநகராட்சியில் உள்ளாட்சி தின விழா

திருநெல்வேலி, நவ. 1: திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை உள்ளாட்சி தின விழா கொண்டாடப்பட்டது.

மேயர் அ.லெ. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, துணை மேயர் கா. முத்துராமலிங்கம், ஆணையர் சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக என். மாலைராஜா எம்.எல்.. கலந்து கொண்டார்.

விழாவில், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் தொகை திட்டத்தின் கீழ், மாநகராட்சிப் பகுதியைச் சேர்ந்த 712 பெண்களுக்கு ரூ. 27.48 லட்சம் நிதியுதவி வழங்கும் பணியை மேயர் தொடக்கிவைத்தார்.

நிகழ் நிதியாண்டில் 3-வது கட்டமாக இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.

விழாவில், மாநகராட்சியின் துப்புரவுப் பணியாளர்களுக்கு சீருடைகளையும் மேயர் வழங்கினார்.

மண்டலத் தலைவர்கள் விஸ்வநாதன் (திருநெல்வேலி), பூ. சுப்பிரமணியன் (தச்சநல்லூர்), மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ், பிராங்ளின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 


Page 324 of 841