Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

களியக்காவிளை பேரூராட்சியில் உள்ளாட்சி தின விழா

Print PDF

தினமணி               02.11.2010

களியக்காவிளை பேரூராட்சியில் உள்ளாட்சி தின விழா

களியக்காவிளை, நவ. 1: களியக்காவிளை பேரூராட்சியில் உள்ளாட்சி தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் மன்றத் தலைவர் எஸ். இந்திரா தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு செயல்

அலுவலர் (பொறுப்பு) இரா. சுருளிவேல் முன்னிலை வகித்தார்.

துணைத் தலைவர் சலாவுதீன், பேரூராட்சி உறுப்பினர்கள் என். விஜயானந்தராம், என். விஜயேந்திரன், எம்.எஸ்.. கமால், . ராஜு, பத்மினி, ராதா, வின்சென்ட் ஆகியோருடன் பேரூராட்சி ஊழியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

களியக்காவிளை பேரூராட்சியை குப்பை இல்லாத பேரூராட்சியாக மாற்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது.

திருத்துவபுரம் முதல் களியக்காவிளை வரையிலான தேசிய நெடுஞ்சாலையோரங்களில் உள்ள கழிவு நீரோடைகளையும், கிராமப்புற கழிவு நீரோடைகளையும் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் தூர்வாரி பராமரிக்கவும் அதற்கு பேரூராட்சி பொது நிதியிலிருந்து செலவு செய்யவும் பொதுமக்கள் முன்னிலையில் முடிவு செய்யப்பட்டது.

 

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ளாட்சி தின விழா

Print PDF

தினமணி                     02.11.2010

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ளாட்சி தின விழா

தூத்துக்குடி, நவ. 1: தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ளாட்சி தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இதை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம், மாநகராட்சி பழைய அலுவலகம், ராஜாஜி பூங்கா உள்ளிட்ட அனைத்து மாநகராட்சி கட்டடங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

இதன் தொடர்ச்சியாக, திங்கள்கிழமை மாலை பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள தலைவர்களின் சிலைகளுக்கு மேயர் இரா. கஸ்தூரி தங்கம், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாநகராட்சி புதிய அலுவலகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி பணியாளர்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

வெற்றிபெற்றவர்களுக்கு மேயர் இரா. கஸ்தூரி தங்கம் பரிசுகளை வழங்கினார்.

இதேபோல், மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஓவியம், கட்டுரை, பேச்சு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில், துணை மேயர் ஜே. தொம்மை ஜேசுவடியான், ஆணையர் பெ. குபேந்திரன், பொறியாளர் ராஜகோபால் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

 

உள்ளாட்சிகள் தின விழாவில் ரூ. 6.12 லட்சம் நலத்திட்ட உதவி

Print PDF

தினமணி                 02.11.2010

உள்ளாட்சிகள் தின விழாவில் ரூ. 6.12 லட்சம் நலத்திட்ட உதவி

நாமக்கல், நவ. 1: நாமக்கல் நகராட்சியில் திங்கள்கிழமை நடந்த உள்ளாட்சிகள் தின விழாவில் ரூ. 6.12 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், மக்களுக்கும் இடையேயான தொடர்புகள் மற்றும் நல்லுறவுகளை மேம்படுத்தும் வகையிலும், நகராட்சித் திட்டப் பணிகளை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையிலும் உள்ளாட்சிகள் தின விழா கொண்டாடப்படுகிறது.

விழாவுக்கு, நகர்மன்றத் தலைவர் இரா.செல்வராஜ் தலைமை வகித்தார். ஆணையர் (பொ) கே.பாலச்சந்திரன், நகராட்சி மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து விளக்கினார்.

இதில், 102 பயனாளிகளுக்கு ரூ. 6.12 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், விநாடி-வினா போட்டியில் வென்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டது. சுகாதார அலுவலர் முகமுது மூசா மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 


Page 325 of 841