Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

ஸ்ரீவிலி.யில் உள்ளாட்சி தின விழா

Print PDF

தினமணி                02.11.2010

ஸ்ரீவிலி.யில் உள்ளாட்சி தின விழா

ஸ்ரீவில்லிபுத்தூர், நவ. 1: ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பில் திங்கள்கிழமை உள்ளாட்சி தின விழா கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு நகராட்சி ஆணையாளர் முத்துக்கண்ணு தலைமை வகித்து, அரசு நகராட்சி நிர்வாகம் சார்பில் செயல்படுத்திவரும் நலத் திட்டங்கள் குறித்து விளக்கினார்.

நகராட்சித் துணைத் தலைவர் அழகர்சாமி, 300 கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசு நிதியுதவியை வழங்கிப் பேசினார்.

விழாவில், நகர்மன்ற உறுப்பினர்கள் செல்வமணி, வழக்கறிஞர் சந்தானம், சுப்பிரமணியன், இருளப்பன், பிரேமா, காளீஸ்வரி, ரெங்கநாயகி, தெரசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதனையொட்டி, பள்ளி மாணவ, மாணவியருக்கு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டன.

முன்னதாக, நகர்மன்ற திரு.வி.. உயர்நிலைப் பள்ளி முன்பு இருந்து சுகாதார விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

பேரணியை துணைத் தலைவர் அழகர்சாமி கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியே வந்து நகராட்சி அலுவலகத்தை அடைந்தது. பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவியர் சுகாதார விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி வந்தனர்.

 

நகர்மன்ற அவசரக் கூட்டம்

Print PDF

தினமணி                 02.11.2010

நகர்மன்ற அவசரக் கூட்டம்

கள்ளக்குறிச்சி, நவ. 1: கள்ளக்குறிச்சி நகராட்சி மன்ற அவசரக் கூட்டம் ராஜாம்மாள் நகரில் உள்ள புதிய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நகராட்சிகளில் பணியிடைக் காலத்தில் இறந்தவர்களின் 4 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம், புதிய அலுவலகத்தில் பெயர்ப் பலகை வைப்பது, கல்வெட்டு அமைப்பது.

நகராட்சி அலுவலகத்தை இடமாற்றம் செய்வதற்கு அனுமதியளித்த நகராட்சிகளின் மண்டல இயக்குனர் சொ.பாலசுப்பிரமணியனுக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர். அவசரக் கூட்டத்துக்கு, நகராட்சித் தலைவி அழகுவேல்பாபு தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜ.ஜோதிமணி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் எல்.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்துக்கு அருகே இயங்கி வந்த நகராட்சி அலுவலக பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக ராஜாம்பாள் நகரில் உள்ள நகராட்சிக் கட்டடத்தில் திங்கள்கிழமை முதல் இயங்குகிறது.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோபால், முருகன், பொறியாளர் வே.பாலமுருகன், அலுவலக தலைமை எழுத்தர் ஆறுமுகம் உள்ளிட்ட கவுன்சிலர்கள் பலரும் பங்கேற்றனர்.

 

உள்ளாட்சிகள் தின விழா

Print PDF

தினமணி                              02.11.2010

உள்ளாட்சிகள் தின விழா

உளுந்தூர்பேட்டை, நவ. 1: விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை பேரூராட்சியில் உள்ளாட்சி தின விழா பேரூராட்சி மன்றத்தலைவர் வெ.இராதாகிருஷ்ணன் தலைமையில் கொண்டாடப்பட்டது.

இதை முன்னிட்டு, உளுந்தூர்பேட்டை நகரத்தை தூய்மையான நகரமாக மாற்றுவதற்கு பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர்கள் ராஜேந்திரன், பாலகுமார் ஆகியோர் முன்னிலையில் துப்புரவு ஊழியர்களுடன், உளுந்தூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப் பணித் திட்ட மாணவிகள் சேர்ந்து பேரூராட்சிக்குட்பட்ட 7-வது வார்டு திருவெண்ணெய்நல்லூர் ரோடு பகுதிகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டனர்.

இப் பணியின்போது, பேரூராட்சி செயல் அலுவலர் இந்திரா, இளநிலை உதவியாளர் தங்கவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

திண்டிவனத்தில்...

திண்டிவனம் நகராட்சி சார்பில் உள்ளாட்சி தினவிழா நகர்மன்றத் தலைவர் பூபாலன் தலைமையில் திங்கள்கிழமை நகர்மன்ற வளாகத்தில் நடைபெற்றது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், மக்களுக்கும் இடையேயான தொடர்புகள் மற்றும் நல்லுறவை மேம்படுத்துகிற வகையில், இவற்றின் பணிகள் சம்மந்தப்பட்ட பகுதிகளில் வாழ்கிற மக்களுக்கு தெரிவிக்கும் வகையிலும் உள்ளாட்சி தின விழா ஆண்டு தோறும் அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் திண்டிவனம் நகராட்சி சார்பில் நடைபெற்ற விழாவில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு "உள்ளாட்சி அமைப்பு' என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நகராட்சி ஆணையாளர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மொத்தம் ரூ 96 ஆயிரம் சுழல்நிதியாக நகர்மன்றத் தலைவரால் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை நகராட்சியின் சமுதாய அமைப்பாளர்களான ராஜலட்சுமி, செல்லப்பன் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் செய்திருந்தனர்.

 


Page 328 of 841