Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

கயத்தாரில் உள்ளாட்சி தினவிழா

Print PDF

தினகரன்            02.11.2010

கயத்தாரில் உள்ளாட்சி தினவிழா

கயத்தார், நவ. 2: கயத்தார் பேரூராட்சியில் உள்ளாட்சி தின விழா பேரணி மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கிடையிலான பேச்சு போட்டி நடந்தது. உள்ளாட்சி தின விழா பேரணியை பேரூராட்சித்தலைவர் இஸ்மாயில் முகைதீன் தலைமையேற்று துவக்கி வைத்தார். வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை சௌந்திரநாயகி, பேரூராட்சி நிர்வாக அலுவலர் மூக்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரணி கயத்தார் நகரின் முக்கியவீதிகளின் வழியாக பஞ்சாயத்து அலுவலகத்தை வந்தடைந்தது. தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி பேரூராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. பேரணியில் அரசுமேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ், என்.சி.சி மாணவர்கள், திட்ட அலுவலர்கள், துணைத்தலைவர் காந்தையா மற்றும் பஞ். கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கயத்தார் பேரூராட்சியில் உள்ளாட்சி தினவிழா நடந்தது.

 

பெரம்பலூர் நகராட்சியில் உள்ளாட்சி தின விழா

Print PDF

தினமலர்                  02.11.2010

பெரம்பலூர் நகராட்சியில் உள்ளாட்சி தின விழா

பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சி சார்பில், உள்ளாட்சி தின விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கும், மக்களிடையே தொடர்பு மற்றும் நல்லுறவை மேம்படுத்தும் வகையிலும், உள்ளாட்சி அமைப்புகளின் பணிகளை மக்களுக்கு தெரிவிக்கும் வகையிலும் விழா நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் நேற்று உள்ளாட்சி தின விழா கொண்டாடப்பட்டது. பெரம்பலூர் நகராட்சியில் நடந்த உள்ளாட்சி தினவிழாவுக்கு கலெக்டர் (பொறுப்பு) பழனிசாமி தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் ராஜா, துணை தலைவர் முகுந்தன் முன்னிலை வகித்தனர். விழாவில், எம்.எல்.., ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சமாதான புறாக்களை பறக்க விட்டு, துப்புறவு பணியாளருக்கு இலவச சீருடைகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து நகராட்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தை எம்.எல்.., ராஜ்குமார் திறந்து வைத்தார். பின்னர் உள்ளாட்சி தின விழாவை முன்னிட்டு நடந்த சுகாதார விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் (பொறுப்பு) பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்து, தெப்பக்குளம் கரையில் மரக்கன்று நட்டு வைத்தார். நிகழ்ச்சியில், டவுன் டி.எஸ். பி., காஜாமொய்தீன், ஆர்.டி.., பாலுசாமி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உட்பட பலர் பங்கேற்றனர்.

 

திண்டுக்கல்லில் உள்ளாட்சி தின விழா

Print PDF

தினமலர்            02.11.2010

திண்டுக்கல்லில் உள்ளாட்சி தின விழா

நிலக்கோட்டை:வத்தலக்குண்டு,நிலக்கோட்டையில் உள்ளாட்சி தின விழா நடந்தது. வத்தலக்கண்டு பேரூராட்சியில் தலைவர் ராஜாத்தி மெர்சி தலைமை வகித்தார். துணை தலைவர் ரவி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் பாலமுருகன் வரவேற்றார். கவுன்சிலர் சின்னதுரை உட்பட பணியாளர்கள் பங்கேற்றனர்.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.சேவுகம்பட்டி பேரூராட்சியில் தலைவர் நாகராணிபெருமாள் தலைமை வகித்தார். துணை தலைவர் வனிதாதங்கராஜன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் கமர்தீன் வரவேற்றார். நாடகம், பேச்சு, கட்டுரை போட்டிகள் நடந்தன. பேரூராட்சி கூட்டம் நடப்பதை போல் மாணவர்கள் நாடகம் நடத்தினர். விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பரிசுகள் வழங்கப்பட்டது.நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி தின விழா கொண்டாடப்பட்டது.

அனைத்து ஊராட்சிகளிலும் அலுவலகங்களில் பேச்சு, போட்டி, நாடகம் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.ராமராஜபுரத்தில் தலைவர் மாயாண்டி தலைமை வகித்தார். துணை தலைவர் ராசேந்திரன் முன்னிலை வகித்தார். உதவியாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.மட்டப்பாறையில் தலைவர் செந்தில்வடிவு முனியசாமி தலைமை வகித்தார். துணை தலைவர் ஜெயமணிபெரியகருப்பன் முன்னிலை வகித்தார். உதவியாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.குல்லலக்குண்டுவில் தலைவர் யசோதைதெய்வராஜ் தலைமை வகித்தார். துணை தலைவர் நாகராஜ் முன்னிலை வகித்தார். உதவியாளர் செல்வம் நன்றி கூறினார்.பழநி: பழநி நகராட்சி சார்பில் உள்ளாட்சிகள் தினவிழா, தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் நடந்தது.

 கமிஷனர் மூர்த்தி முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் ஹக்கீம் வரவேற்றார். நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஒட்டுமொத்த சுகாதாரம், மரம் நடுவிழா, விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. கவுன்சிலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.வேடசந்தூர்: வேடசந்தூர் ஒன்றியத்தில் ஊராட்சி, பேரூராட்சிகளில் உள்ளாட்சி தின விழா நடந்தது.வேடசந்தூர் பேரூராட்சியில் தலைவர் பஷீர் அகமது தலைமையில், துø ணத் தலைவர் பழனிச்சாமி முன்னிலையில் நடந்தது. செயல்அலுவலர் என். செல்வா வரவேற்றார். ஒன்றியத்தில் நடந்த விழாவிற்கு தலைவர் நடராசன் தலைமை தாங்கினார்.ஆணையாளர்கள் சுப்பிரமணியன், சாம்.சாந்தகுமார் முன்னிலை வகித்தனர்.துணை ஆணையாளர் மலரவன் வரவேற்றார்.

 


Page 329 of 841