Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

உள்ளாட்சி தின விழா

Print PDF

தினகரன்                        02.11.2010

உள்ளாட்சி தின விழா

அறந்தாங்கி, நவ.2: அறந்தாங்கி நகராட்சியில் நேற்று உள்ளாட்சி தினவிழா நடைபெற்றது. புதுக்கோட்டை சாலையில் உள்ள கலவை உரக்கிடங்கில் மகளிர் சுய உதவிக்குழுவிணர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சுகாதார பணிகளை மேற்கொண்டணர். பின்னர் நகராட்சி அலுவலகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உள்ளாட்சியில் நல்லாட்சி என்னும் தலைப்பில் பேச்சுப்போட்டி நடந்தது. நகர்மன்ற தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். ஆணையர் அசோக்குமார், நகர்மன்ற துணைத் தலைவர் கட்சு முகமது, நகராட்சி பொறியாளர் தங்கபாண்டியன் முன்னிலை வகித்தனர்.

6,7 வகுப்புகளுக்கும், 9,10,12 ஆகிய வகுப்புகளுக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. 6,7 பிரிவில் அறந்தாங்கி எல்என்புரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவன் சுரேஷ் முதல்பரிசும், காமராஜர் நடுநிலைப்பள்ளி மாணவி புவனேஸ்வரி 2ம்பரிசும், நகராட்சி நடுநிலைப்பள்ளி மேற்கு மாணவன் பிரவீன் 3ம் பரிசும், 9,10,12ம் வகுப்பு பிரிவில் சேக்அப்துல்லா, சுதன்குமார், பவித்ரன் ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர். போட்டியின் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் மாரியப்பன் பேசியதாவது: 2006 முதல் நகராட்சி தலைவராக பொறுப்பேற்ற பின்னர் அறந்தாங்கி நகராட்சியில் ரூ.1,553.30 லட்சம் மதிப்புள்ள பல்வேறு பணிகள் நடைபெற்றது. இதில் சில பணிகள் நிறைவுபெற்றுள்ளன. விரைவில் அறந்தாங்கி நகராட்சியில் ரூ.3 கோடி மதிப்புள்ள சிறப்பு சாலை திட்டம் துவங்கப்படவுள்ளது. நகராட்சியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னையை போக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு நகர்மன்ற மாரியப்பன் பேசினார்.

நகர்மன்ற உறுப்பினர்கள் முரளிதரன், ராஜேந்திரன், ரமேஷ், வெங்கடேசன், பார்த்திபன், அரசு வக்கீல் வெங்கடேசன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் நாகராஜன், முருகநாராயணன், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போட்டியில் வென்ற மாணவர்களுக்கு நகர்மன்ற தலைவர் மாரியப்பன் பரிசு வழங்கினார். முன்னதாக நடந்த மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை எம்எல்ஏ உதயம் சண்முகம் துவக்கி வைத்தார். ஆர்டிஓ நாகேந்திரன் தலைமை வகித்தார்.

 

பெரம்பலூர் நகராட்சியில் உள்ளாட்சி தினவிழா துப்புரவு பணியாளருக்கு இலவச சீருடை

Print PDF

தினகரன்                     02.11.2010

பெரம்பலூர் நகராட்சியில் உள்ளாட்சி தினவிழா துப்புரவு பணியாளருக்கு இலவச சீருடை

பெரம்பலூர், நவ. 2: பெரம்பலூர் நகராட்சியில் நடந்த உள்ளாட்சி தினவிழாவில் துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பா ண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் 121 ஊராட்சிகள், பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை ஆகிய 4 ஒன்றியங்கள், குரு ம்பலூர், அரும்பாவூர், பூலா ம்பாடி, லப்பைகுடிகாடு ஆகிய 4 பேரூராட்சி, ஒரு மாவட்ட ஊராட்சி உள்ளி ட்ட 130 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ளாட்சி தின விழா கொண்டாடப்பட்டது.

பெரம்பலூர் நகராட்சி யில் நடந்த நிகழ்ச்சிக்கு நக ராட்சி தலைவர் இளைய ராஜா தலைமை வகித்தார். எம்எல்ஏ ராஜ்குமார் முன் னிலை வகித்தார். நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு சீருடைகளை கலெக்டர் (பொ) பழனிச்சாமி வழங்கினார். முன்னதாக கலெக் டர் பழனிச்சாமி, எம்எல்ஏ ராஜ்குமார், நகராட்சி தலைவர் இளையராஜா, துணைத்தலைவர் முகுந்தன், ஆணையர் சுரேந்திர ஷா ஆகியோர் வெண் புறாக் களை பறக்க விட்டனர்.

நகராட்சி அலுவலக வளாகத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு, குடிநீர் இணைப்பு, பாதாள சாக் கடை திட்ட இணைப்பு, வீட்டுமனை வரிவிதிப்பு ஆகியவற்றிற்காக விண்ணப்பித்து உடனுக்குடன் பயன்பெற வசதியாக அமை க்கப்பட்டுள்ள தகவல் மையம், குடிநீர், தெருவிள க்கு, சுகாதாரப்பணிகள் தொடர்பான புகார் பதிவு செய்யும் மையத்தை எம்எல்ஏ ராஜ்குமார் திறந்து வைத்தார். பெரம்பலூர் கோட்டாட்சியர் பாலுசாமி, டிஎஸ்பி காஜாமொய்தீன், கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கிறிஸ்டோபர் வாழ்த்தினர்.

நகராட்சி துணைத்தலைவர் முகுந்தன், ஆணை யர் சுரேந்திரஷா, கவுன்சிலர்கள் பாரி, அன்புதுரை, கனகராஜ், ரஹமத்துல்லா, சிவக்குமார், மாரிக்கண் ணன், ஜெயகுமார், ரமேஷ் பாண்டியன், சுசீலா, ஈஸ்வரி, புவனேஷ்வரி, கண் ணகி, தாண்டாயி மற்றும் நகராட்சி பொறியாளர், துப்புரவு ஆய்வாளர், மேற்பார்வையாளர், அலுவலர் கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து சுகாதாரத்தை வலியுறுத்தி நர்சிங் கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்ட சுகாதார விழிப்புணர்வு பேரணியை கலெக்டர்(பொ) பழனிச்சாமி துவக்கி வைத் தார்.

பேரணியில் தனலட்சுமி சீனிவாசன் நர்சிங் கல்லூரி, ரோவர் நர்சிங் கல்லூரி, கிறிஸ்டியன் நர்சிங் கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். பழைய பஸ்ஸ்டாண்டு, காமராஜர் வளைவு, சங்குப்பேட்டை, வெங்கடேசபுரம், பாலக்கரை வழியாக புதுபஸ்ஸ்டாண்டு பகுதி வரை பேரணி நடந்தது.

 

உள்ளாட்சி தின விழா மாணவர்களுக்கு பேச்சு போட்டி வென்றோருக்கு பரிசு

Print PDF

தினகரன்                                02.11.2010

உள்ளாட்சி தின விழா மாணவர்களுக்கு பேச்சு போட்டி வென்றோருக்கு பரிசு

கரூர், நவ. 2: கரூர் மாவட்டத்தில் உள்ள ஊரக நகர் ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நேற்று உள்ளாட்சிகள் தின விழா நடைபெற்றதையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை போட்டி கள் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், மக்களுக்கும் இடையே நல்லுறவினை மேம்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 1ம்தேதி உள்ளாட்சிகள் தின விழா கொண்டாடப்படுகிறது. இதையடுத்து நேற்று உள்ளாட்சி தினவிழா அனைத்து உள்ளாட்சி மன்றங்களிலும் கொண்டாடப்பட்டது. கரூர் மாவட்ட ஊராட்சி அலுவலக கட் டட கூட்ட அரங்கில் நடை பெற்ற உள்ளாட்சிகள் தின விழாவுக்கு மாவட்ட ஊரா ட்சி தலைவர் ரமேஷ்பாபு தலைமை வகித்தார். துணைத்தலைவர் செல்லமுத்து, மாவட்ட ஊராட்சி செயலாளர் கனகம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் நாகரத்தினம், கந்தசாமி, கஸ்தூரிதங்கராஜ், கோபால் ஆகியோர் கலந்துகொண்டனர். உள்ளாட்சிகள் தினவிழாவையொட்டி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

இனாம் கரூர் நகராட்சியில் உள்ளாட்சிகள் தின விழா நகராட்சி மன்ற அலுவலகம் முன் நடைபெற்றது. நகராட்சி தலைவி கவிதா கணேசன் மற்றும் நகராட்சி அலுவலர்கள், தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசளிக்கப்பட்டது. இசைநாற்காலி போட்டியில் நகர்மன்ற தலைவி கவிதா கலந்துகொண்டார்.

இதேபோன்று மாவட் டம் முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி மன்றங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவைகளின் செயல்பாடுகள் குறித்த சுவரொட்டிகள், விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. மாணவ மாணவிகளுக்கு உள்ளாட்சி நிர்வாகம் குறித்த பேச்சுப்போட்டி, பொது அறிவு போட்டிகள் ஆகியவற்றை நடத்தி அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் விழா நடைபெற்றது.

 


Page 331 of 841