Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சாத்தான்குளம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம்

Print PDF

தினகரன்    20.05.2010

சாத்தான்குளம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம்

சாத்தான்குளம், மே 20: சாத்தான்குளம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பை, பொருட் களை மக்கள் பயன்படுத்தினால் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பேரூராட்சி தலைவி தங்கத் தாய் தெரிவித்துள¢ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

சாத்தான்குளம் பேரூராட்சியில் பகுதிகளில் மக்கள் குப்பைகளை கண்டபடி தெருக்களில் கொட்டி வருகின்றனர். அதனை பேரூராட்சி வாகனம் மூலம் அப்புறப்படுத்தினாலும், மீண்டும் அதே இடத்தில் குப்பைகள் சேர்ந்து விடுகின்றன.

பொதுமக்கள் கண்ட இடத்தில் குப்பைகளை கொட்டாமல் குப்பை வண்டியில் கொட்டி, சுகாதார நகரமாக மாற்ற உதவ வேண்டும்.

குப்பை கொட்டும் மையம் போதுமானதாக இல்லாததால் புறம்போக்கு நிலம் ஒதுக்கி தரக்கோரி கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பை மற்றும் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க கூட்டங்கள் நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

அதன்பிறகும் பிளாஸ்டிக் பை, பொருட் களை மக்கள் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.