Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கரூரில் பிளாஸ்டிக் "கப்' இன்று முதல் பயன்படுத்த தடை

Print PDF

தினமலர் 01.06.2010

கரூரில் பிளாஸ்டிக் "கப்' இன்று முதல் பயன்படுத்த தடை

கரூர்: கரூர் நகராட்சி பகுதியில் இன்று முதல் பிளாஸ்டிக் "கப்' பயன்படுத்த தடை அமலாகிறது. மறுசுழற்சிக்கும் பயனில்லாத, நிலத்தடி நீரை பாழ்படுத்துவதுடன், நகராட்சி பகுதியில் கழிவுநீர் வாய்க்கால்களில் அடை ப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பை மற்றும் "கப்' பயன்பாட்டை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. சமீபத்தில் கரூர் நகராட்சி கமிஷனராக பொறுப்பேற்ற உமாபதி, முதற்கட்டமாக நகரில் பிளாஸ்டிக் "கப்' பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், பஸ் ஸ்டாண்ட் பகுதியை தூய்மைப்படுத்தவும் திட்டமிட்டார். இதற்கான ஒத்துழைப்பை அனைத்துக்கட்சி கவுன்சிலர்களும் அளிக்க வேண்டும் என்று ஏப்ரல் மாத மன்ற கூட்டத்தில் கமிஷனர் முன்வைத்தார். கமிஷனரின் முயற்சிக்கு முழுமையான ஒத்துழைப்பு அளிப்பதாக கவுன்சிலர்களும் ஒருமனதாக உறுதியளித்தனர்.ஏற்கனவே கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் "கப்'களை அப்புறப்படுத்த ஜூன் முதல் தேதிவரை அவகாசம் அளிக்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில், அனைத்து பலசரக்கு கடைகள், திருமண மண்டபம், சினிமா தியேட்டர்கள், குளிர்பானம் மற்றும் டீக்கடைகளில் நகராட்சியின் தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக எழுத்து பூர்வமாக ஒப்புதல் வாங்கும் பணி நடந்தது. பிளாஸ்டிக் "கப்' புறக்கணிப்பு தேவை குறித்த விழிப்புணர்வு நோட்டீஸும் கடைகளுக்கு அளிக்கப்பட்டது. பிளாஸ்டிக் "கப்' களை அப்புறப்படுத்த கடைகளுக்கு அளிக்கப்பட்ட காலஅவகாசம் நேற்றுடன் முடிந்தது. இந்நிலையில், இன்று முதல் நகராட்சியில் உள்ள ஏழு துப்புரவு ஆய்வாளர்கள் தலைமையில் தலா ஐந்து பேர் கொண்ட குழு எந்நேரத்திலும், எப்பகுதியில் வேண்டுமானாலும் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு ஆய் வு செய்யப்படும்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் "கப்' கிடைத்தால், அனைத்தும் பறிமுதல் செய்யப்படவுள்ளது. தற்பே õது எவ்வித அபராதமும் விதிக்கும் திட்டம் இல்லாவிட்டாலு ம், கிடைக்கும் "கப்' அனைத்து ம் பறிமுதல் செய்யப்படுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

கமிஷனர் உமாபதி கூறியதாவது: கரூர் நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் "கப்' பயன்பாட்டு தடை தீவிரமாக அமல்படுத்தப்படும். கடைகள் தோறும், "இவ்விடம் பிளாஸ்டிக் கப் விற்கப்படுவதில்லை' என்ற அறிவிப்பு வைக்கப்படும். இந்த அறிவிப் பை நகராட்சி ஊழியர்கள் கடை தோறும் அளித்துவருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். கரூர் நகராட்சி பகுதியில் ஆ ய்வு என்றாலே பஸ் ஸ்டாண் ட் சுற்றிலுள்ள கடைகளில் ம ட்டுமே நடப்பது வழக்கம்.இம் முறையாவது, பரவலாக ந கராட்சியின் அனைத்து பகுதியிலும் அலுவலர்கள் ஆய்வு நட த்தவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.