Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கூடலூர் பேரூராட்சியில் 10ஆயிரம் மரக்கன்று

Print PDF

தினமணி 10.06.2010

கூடலூர் பேரூராட்சியில் 10ஆயிரம் மரக்கன்று

பெ.நா.பாளையம், ஜூன் 9: கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டி பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள மக்கள் பங்களிப்புடன் கூடலூர் பேரூராட்சியின் பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் பணி செவ்வாய்கிழமை துவங்கியது.

÷இப்பேரூராட்சியில் பல ஆண்டு காலமாக தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த 10 ஏக்கர் அரசு நிலத்தை பேரூராட்சித் தலைவர் பாப்பண்ணன்,செயல் அலுவலர் கே.கல்யாணசுந்திரன் ஆகியோர் தீவிர நடவடிக்கை எடுத்து கையகப்படுத்தினர்.

இதில் தற்போது அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

÷இதனை செவ்வாய்கிழமை நடந்த நிகழ்ச்சியில் பாப்பண்ணன் துவக்கி வைத்தார். அப்போது உடனிருந்த செயல் அலுவலர் கல்யாணசுந்தரம் விரைவில் இம்மாநாட்டை முன்னிட்டு ரூ. 20 லட்சம் செலவில் வஞ்சிமா நகரில் உருவாக்கப்பட்டுள்ள மனமகிழ் பூங்கா திறக்கப்பட உள்ளது, என்றார். அரசு மருத்துவமனைக்கு

கூடுதல் வசதி கோரி அதிமுக ஆர்ப்பாட்டம் கோவை, ஜூன் 9: கோவை அரசு மருத்துவமனைக்கு கூடுதல் வசதிகள் செய்துதரக் கோரி அதிமுக சார்பில் வரும் சனிக்கிழமை (ஜூன் 12) ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

செஞ்சிலுவைச் சங்கக் கட்டடம் அருகே நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தேர்தல் பிரிவு செயலர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமை வகிக்கிறார்.

மாநகர் மாவட்ட செயலர் செ..வேலுசாமி, புறநகர் மாவட்ட செயலர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

செம்மொழி மாநாடு என்ற பெயரில் மக்களின் வரிப்பணம் வீணாக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய அறுவைச் சிகிச்சைப் பிரிவு, சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தி கட்டடம் உள்ளிட்ட கூடுதல் வசதிகளைக் கொண்டு வரக் கோரியும், கோவை மாநகராட்சியின் நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது, என்று அதிமுக தெரிவித்துள்ளது.