Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கடற்கரை கிராமங்களில் பிளாஸ்டிக் துப்புரவு முகாம் அமைச்சர் சுரேஷ்ராஜன் துவக்கி வைத்தார்

Print PDF

தினகரன் 14.06.2010

கடற்கரை கிராமங்களில் பிளாஸ்டிக் துப்புரவு முகாம் அமைச்சர் சுரேஷ்ராஜன் துவக்கி வைத்தார்

நாகர்கோவில், ஜூன் 14: குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவு துப்புரவு முகாம்களை அமைச்சர் சுரேஷ்ராஜன் துவக்கி வைத்தார்.

குமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு ஒழிப்பு நடவடிக்கைகள் முழு அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டத்தை பிளாஸ் டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக மாற்ற மாவட்ட நிர்வாகம், உள் ளாட்சி அமைப்புகள் மேற் கொண்ட நடவடிக்கையி னால் பொதுமக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தி மறுசுழற்சிக்கு பயன்படுத்த இய லாத பிளாஸ்டிக் பொருட் கள் (பிளாஸ்டிக் பை, கேரி பேக்குகள்) பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்தகட்டமாக வரும் ஜூலை 1ம் தேதி முதல் குமரி மாவட்டத்தை குப்பைகள் இல்லாத, சுகாதாரமான மாவட்டமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகளை சேர்ந்த குளச்சல் நகராட்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட 12 பேரூராட்சிகள், கோவளம் உள்ளிட்ட 12 ஊராட்சிகளில் கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவு பொருட் கள் மற்றும் பிற கழிவுகளை முழுமையாக அகற்றிட முழு துப்புரவு முகாம் நடந்தது.

அனைத்து கடற்கரை பகுதிகளிலும் நடந்த முழு துப்புரவு முகாம்களில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஊர் பொதுமக்கள், உள்ளாட்சி தலைவர்கள், பிரதிநிதிகள், பங்குதந்தையர்கள், சுய உதவிக்குழுவினர் பங்கேற்றனர். பிளாஸ்டிக் கழிவு முழு துப்புரவு முகாமை கோவளம் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் சுற்றுலா மற்றும் பதிவுத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் ராஜேந்திர ரத்னூ, கோவளம் ஊராட்சி தலைவர் பெல்சிற்றாள், துணைத்தலைவர் புஷ்பராஜ், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சிவராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரகுபதி, ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக கோவளம் ஊராட்சியில் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்களிடம் இருந்து அமைச்சர் சுரேஷ்ராஜன், கலெக்டர் ராஜேந்திர ரத்னூ ஆகியோர் குறைகளை கேட்டறிந்தனர். அப்போது தூண்டில்வளைவு கட்டுதல், பேருந்து வசதி, விடுபட்டவர்களுக்கு கலர் டிவி வழங்குதல் போன்றவை தொடர்பாக பொதுமக்கள் அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சுரேஷ்ராஜன் உறுதியளித்தார்.