Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாலீத்தீன் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை தேவை

Print PDF

தினமலர் 30.06.2010

பாலீத்தீன் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை தேவை

பெரியகுளம்: போடி நகராட்சியில் பாலீத்தீன் பைகளை ஒழிக்க நடவடிக்கை எடுத் தது போல், மாவட்டத்தின் எல்லா நகராட்சிகளிலும் எடுக்க வேண்டும்.மாவட்டத்தில் பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், உட்பட சைவம், அசைவ ஓட்டல்கள் மற்றும் மாலை நேரக்கடைகளில் பெரும்பாலும் பாலிதீன் பேப்பர்கள், பைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின் றன.உணவுகள் பரிமாறுவதற்கும், பார்சல்கள் கட்டுவதற்கும் பாலீத்தீன் பயன் படுத்தக் கூடாது என சுகாதாரத்துறை உத்தரவு உள்ளது. பாலிதீன் பேப்பர்களில் பார்சல்கள் கட்டுவதால், ஒரு மணி நேரம் கழித்து பிரித்து பார்க்கும் போது துர்நாற்றம் வீசுகிறது. போடி நகராட்சி நிர்வாகம் பாலீத்தீன் பைகளை ஒழிக்க நல்ல முறையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் போடியில் பாலீத்தீன் பேப்பர், பைகள் தடுக்கப்பட்டு விட்டது. மக்களும் பார்சல்களுக்கு பாத்திரங்கள், சணல் பைகள், பேப்பர் பைகளை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். மற்ற நகராட்சிகளிலும் இதனை நடைமுறைப்படுத்த பாலித்தீன் பேப் பர்களை பயன்படுத்தும் ஓட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.