Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுகாதார பணிகளில் அலட்சியம் தடையை மீறி பிளாஸ்டிக் பயன்பாடு மாநகராட்சியில் கவுன்சிலர்கள் புகார்

Print PDF

தினகரன் 30.06.2010

சுகாதார பணிகளில் அலட்சியம் தடையை மீறி பிளாஸ்டிக் பயன்பாடு மாநகராட்சியில் கவுன்சிலர்கள் புகார்

திருப்பூர், ஜூன் 30: தடையை மீறி பிளாஸ்டிக் பொருட் களை பயன்படுத்தி வருவ தாக திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் கூறினர்.

திருப்பூர் மாநகராட்சி கூட்டம் நேற்று மாலை நடந் தது. மாநகராட்சி மேயர் செல்வராஜ் தலைமை தாங் கினார். மாநகராட்சி ஆணை யாளர் ஜெயலட்சுமி, துணை மேயர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சுகாதாரத்துறையில் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டிவருவதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். இதன் மீது நடந்த விவாதம் வருமாறு.

சிவபாலன் (.தி.மு..) :

திருப்பூர் மாநகராட்சியில் சுகாதார சீர்கேடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடைவிதிக்கப்பட்ட போதும், தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. சாக்கடைகள் முழு வதும் பிளாஸ் டிக் பொருட் கள் நிரம்பிக் கிடக்கின்றன. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. பிளாஸ்டிக் பொருட்கள் அடைத்து சாக்கடைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகளும் சரி செய்யப்படுவதில்லை. முழுமையான அளவில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வேண்டும். பெயரளவுக்கு மட்டுமே சோதனை நடத்த கூடாது. இதை கண்டித்து ம.தி.மு.. வெளிநடப்பு செய்கிறது.

அருணாச்சலம் (இந்திய கம்யூ) :

‘ஒன் யூஸ் டம்ளர்’ எனும் ஒருமுறை பயன்பாட்டுக்கான பிளாஸ்டிக் டம்ளர் பயன்படுத்த கூடாது என தடை விதித்துள்ளோம். ஆனால், அதை மீறி மாநகர் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதேபோல், பனியன் கழிவுகளை சாலையோரத்தில் கொட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி கொட்டப்பட்டு வரு கிறது. இதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

ஷாஜகான் (.தி.மு..) :

குப்பை அகற்றும் வாகனங்களில் பல வாகனங்கள் முறையாக செயல்படுவதில்லை. பல லாரிகளில் பேட்டரிகள் இல்லை. எனது வார்டில் மட்டும் 6 லாரிகளில் பேட்டரிகள் இல்லாமல் தள்ளி செல்லும் நிலையில் உள்ளது.

முருகசாமி (.தி.மு..) :

மாநகரில் சுகாதார பணி களில் மெத்தனப்போக்கு நிலவி வருகிறது. டீக்கடை, உணவகங்களில் கழிவுகளை கொட்ட குப்பை தொட்டி கள் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்று வரை வைக்கப்படவில்லை. சுகாதார அதிகாரி பதவி, வெறும் அலங்கார பதவியாகவே உள்ளது. ஆய்வாளர்களும் முறையாக சோதனை நடத்துவதில்லை. ஆய்வு நடத்தவும், சுகாதார பணிகளை மேற்கொள்ளவும் அவர் சிரத்தை எடுத்துக்கொள்ள தயங்குகின்ற னர். எது கேட்டாலும் பதில் மட்டுமே சொல்கின்றனர். செயல்பாட்டில் ஒன்றும் இல்லை. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. கோழி கழிவுகள் ரோட்டோரத்தில் கொட்டப்பட்டு வருகின்றன. இவற்றுக்கெல்லாம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

இதேபோன்று சுகாதாரத்தில் மாநகராட்சி நிர் வாகம் மெத்தனம் காட்டி வருவதாக பலர் புகார் தெரிவித்தனர்.