Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஓட்டல்களில் பாலித்தீன் பைகளுக்கு தடை : சுற்றுச்சூழலை பாதுகாக்க திட்டம்

Print PDF

தினமலர் 26.07.2010

ஓட்டல்களில் பாலித்தீன் பைகளுக்கு தடை : சுற்றுச்சூழலை பாதுகாக்க திட்டம்

காரைக்குடி : சுற்றுச்சூழல் மாசு ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது பாலித்தீன் பைகள். ஆக.,1ம் தேதி முதல் இவற்றை பயன்படுத்த காரைக்குடி நகராட்சி தடை விதித்துள்ளது. இத்தடையை மாவட்டம் முழுவதும் பின்பற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பாலித்தீன், பிளாஸ்டிக் பொருட்கள் 400 ஆண்டுகளானாலும், அதற்கு மக்கும் தன்மை இல்லை. இதனால், பூமியில் சேகரமாகும் கழிவுகள் பல ஆண்டுகளாகியும் அப்படியே இருப்பதால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக பாதிக்கிறது.

பாலித்தீன் கழிவுகளை எரித்தால் அதில் ஏற்படும் கரும்புகையில் மாசு ஏற்பட்டு, சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். குப்பைகளில் போடப்படும் பாலித்தீன் கழிவு பொருட்களை கால் நடைகள் உண்பதினால், அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதுபோன்று பல் வேறு வகையில், சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பாலித்தீன், பிளாஸ்டிக் பொருட்களுக்கு காரைக்குடி நகராட்சி தடை விதித்துள் ளது. இதற்கான ஒப்புதல் கவுன்சில் கூட்டத்தில் வழங்கப்பட்டது.

தடை செய்ய ஆலோசனை: இதற்காக, நகரின் ஓட்டல் உரிமையாளர் களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், இதை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து தெரிவித்தனர். எனவே, பாலித்தீனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தவிர்க்க, ஓட்டல்கள், டீக்கடை, திருமண மண்டபம் உள்ளிட்ட உணவு கூடங்களில் கட்டாயம், "பேப்பர் கப்', "பேப்பர்' தட்டுகளை பயன்படுத்த உத்தரவிடப்பட்டது.

இது தவிர 20 மைக்ரான் அளவுள்ள பாலித்தீன் பைகளை கட்டாயம் பயன் படுத்த தடை விதித்துள்ளனர். இத்தடை உத்தரவு ஆக.,1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதை கடைபிடிக்காத கடைகளுக்கு அபராதம் விதிக்கப் படும் என நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், ஓட்டல், டீக்கடை உள்ளிட்ட உணவு பொருள் விற்பனையாளர்கள் கலக் கம் அடைந்துள்ளனர். பொதுமக்களிடத்தில் இத் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இது குறித்து நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் கூறுகையில்,"" கன்னியாகுமரியில் பிளாஸ்டிக், பாலித்தீன் பைகளுக்கு தடை விதித்துள்ளனர். இதனால், பிளாஸ்டிக், பாலித்தீன் இல்லா மாவட்டமாக திகழ்கிறது. இங்கு பெட்டிகடை, பலசரக்கு கடை, ஓட்டல், ஜவுளிக்கடைகளில் பாலித்தீன் பைகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

இதனால் மக்காத குப்பைகள் அதிகரித்து, நகரின் தூய்மை கெட்டுவிடாமல் இருக்க, இதற்கு தடை விதித்துள்ளோம். இதை மீறினால் நகராட்சி சட்டப்படி அபராதம் விதிக்கப்படும்,'' என்றார்.

பாலித்தீன், பிளாஸ்டிக் பைகளுக்கு மாவட்ட முழுவதும் தடைவிதித்தால் மட்டுமே சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். இதில், கலெக்டர் முழு கவனம் செலுத்தவேண்டும்.