Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாலிதீன் பறிமுதல்: அபராதம்

Print PDF

தினமணி 06.08.2010

பாலிதீன் பறிமுதல்: அபராதம்

ராமேசுவரம், ஆக. 5: ராமேசுவரம் கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பாலிதீன் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 6,200 அபராதமாக விதிக்கப்பட்டது.

ராமேசுவரம் தீவு பகுதியில் பாலிதீன் பை, கப் போன்ற பொருள்கள் பயன்படுத்த கடந்த ஜனவரி 15-ம் தேதி முதல் மாவட்ட ஆட்சியர் த.. ஹரிஹரன் தடை விதித்திருந்தார். ஆனாலும், இங்கு ஒரு சில கடைகளில் பாலிதீன் பொருள்களை பதுக்கி வைத்து விற்கப்பட்டு வந்தது. இதை, பாலிதீன் எதிர்ப்புக் குழுவினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திங்கள்கிழமை ராமேசுவரம் வட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமையில், வட்டாட்சியர் அலுவலர் ஜபார், ராமேசுவரம் நுகர்வோர் இயக்கத் தலைவர் அசோகன், விபத்து மீட்புச் சங்கத் தலைவர் களஞ்சியம், நுகர்வோர் இயக்க துணைச் செயலர் ரவிச்சந்திரன் ஆகியோர், இங்குள்ள கோழி, ஆட்டிறைச்சி கடைகள், உணவு விடுதிகள் உள்ளிட்ட 24 கடைகளில் சோதனை நடத்தினர்.

அப்போது, ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள பாலிதீன் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், பதுக்கி வைத்திருந்த கடையின் உரிமையாளர்களிடம் ரூ. 6,200 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

ஏற்கெனவே, பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட கடை உரிமையாளர்கள், மீண்டும் விற்பனை செய்வது தெரியவந்தால், அவர்கள் மீது இந்திய குற்றவியல் சட்டம் 188-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்படுவர் என, வட்டாட்சியர் ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.