Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் பைகளை கட்டுப்படுத்த குழு

Print PDF

தினமலர் 20.08.2010

பிளாஸ்டிக் பைகளை கட்டுப்படுத்த குழு

தேனி : பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் கடைகள் ஓட்டல்களில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி கமிஷனர் மோனி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: தேனி நகராட்சி பகுதியில் அனைத்து கடைகள், ஓட் டல்கள், வர்த்தக நிறுவனங்களிலும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்த தடையினை தீவிரமாக அமல்படுத்த எனது தலைமையில் சுகாதாரத்துறை அலுவலர்களை கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டுள் ளது. இக்குழுவினர் இன்று முதல் சோதனை மேற்கொள்ள உள்ளனர். பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தும் கடைகள் ஓட் டல்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் உடனடியாக விதிக்கப்படும். சோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றார்.