Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

20 ஆயிரம் மூங்கில் கன்று நட திட்டம்

Print PDF

தினகரன் 25.08.2010

20 ஆயிரம் மூங்கில் கன்று நட திட்டம்

கோவை, ஆக 25: கோவை வெள்ளலூர் குப்பை கிடங் கில் 20 ஆயிரம் மூங்கில் மரக்கன்று நட திட்டமிடப்பட்டுள்ளது. கோவை வெள்ளலூரில் மாநகராட்சியின் குப்பை கிடங்கு உள்ளது. 640 ஏக்க ரில் அமைந்துள்ள இந்த குப்பை கிடங்கில் 39.4 ஏக்கர் நிலத்தை தனியார் அறக்கட்டளை அபகரித்து மனைகளாக மாற்றியது.

இதைதொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகத்தினர் நிலத்தை கைப்பற்றினர். குப்பை கிடங்கு வளாகம் சுற்றுப்பரப்பு 5 கி.மீ தூரம். இதில் 3.5 கி.மீ சுற்றளவிற்கு சுற்றுசுவர் கட்டப்பட்டது. இன்னும் 1.5 கி.மீ தூரத்திற்கு சுற்றுசுவர் கட்டவேண்டும்.முழுமையாக சுற்றுசுவர் கட்டினால் மட்டு மே குப்பை கிடங்கு வளாகத்தில் ஆக்கிரமிப்பை தடு க்க முடியும். ஆனால், மாநகராட்சியினர் பல ஆண்டுகளாக சுற்றுசுவர் கட்டுவ தில் தாமதம் செய்து வருகி றது. இதனால், ஆக்கிரமிப்பும், திருட்டும் அதிக மாகி விட்டது. மாநகராட்சி குப்பை கிடங்கு வளாகத்தில் பிளாஸ் டிக், இரும்பு, தளவாட பொருட்கள், டீசல், குப்பை களில் கலந்து வரும் இரும்பு கழிவு போன்றவை தின மும் திருடப்படுகிறது.

இதை தடுக்க, தனியார் செக்யூரிட்டிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களில் சிலர் திருட்டிற்கு உடந்தையாக இருப்பதாக தெரிகிறது. குப்பை கிடங்கு வளாகத்தில் வனத்துறையின் காடு வளர்ப்பு திட்டத்தில் நடப்பட்ட 5 ஆயிரம் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது. தற்போது, மாநகராட்சி சார்பில் 500 வேம்பு, வாகை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட் டது. மாநகராட்சி சார்பில் 93.50 கோடி ரூபாய் செல வில் திடக்கழிவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

குப்பை கிடங்கு வளா கம் பசுமை பூங்காவாக மாற்ற திட்டமிடப்பட்டது. விஞ்ஞான ரீதியான கழிவு கட்டமைப்பு, குப்பை தரம் பிரிப்பு எதுவும் சரியாக நடக்கவில்லை. குப்பை மேடு வளாகத் தில் ஈ, கொசு தொல்லை, துர்நாற்றம் தொடர்ந்து அதிகரிக்கிறது. நாற்றம் தடுக்க கிருமி நாசினி தெளி ப்பு பணியும் நடத்தவில் லை. பல ஆண்டுகளாக தொடரும் பிரச்னைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.

மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், " வெள் ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் 20 ஆயிரம் முள் இல்லாத மூங்கில் நட்டு வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இது காற்றை சுத்தம் செய்யும் கார்பன் டை ஆக்சைடு அளவு குறைந்து ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும். சுற்றியுள்ள குடியிருப்புகள் சுகாதாரகேட்டினால் பாதிக்காது. அந்த அளவிற்கு திட் டம் செயல்படுத்தப்படும். விரைவில் 20 லட்ச ரூபாய் செலவில் 1300 மீட்டர் தூரத் திற்கு சுற்றுச்சுவர் கட்டப்படும். இதன் மூலம் குப்பை கிடங்கில் வெளிநபர் அத்துமீறி புக முடியாது, " என்றார்.