Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கம்பம் நகராட்சி பகுதியில் பாலிதீன் பைகளுக்கு தடை நாளை முதல் அமலுக்கு வருகிறது

Print PDF

தினகரன் 05.10.2010

கம்பம் நகராட்சி பகுதியில் பாலிதீன் பைகளுக்கு தடை நாளை முதல் அமலுக்கு வருகிறது

கம்பம், அக். 5: கம்பம் நகராட்சி பகுதியில் பாலித்தீன் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கம்பம் நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பைககள், கேரி பேக்குகள், டீ கப்புகள் ஆகியவை அதிகளவில் பயன்படுத் தப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசுபட்டு வருகிறது. மேலும் பாலிதீன் பைகள் ஆங்காங்கே சாக்கடைகளை அடைத்துவிடுகிறது. இதனால் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. எனவே, பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்க வேண்டுமென கம்பம் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்திட்டம் செயல்படுத்துவது குறித்து இதுவரை பொதுமக்களிடம் இருந்து எந்தவித எதிர்ப்பும் வரவில்லை.

இதையடுத்து கம்பம் பகுதியில் வர்த்தக நிறுவனங்கள், கடைகள், உரிமையாளர்களை அழைத்து நாளை (6ம் தேதி) நகர்மன்றத் தலைவர் தலைமையில் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடைவிதிக்கப்படுவதாக சுகாதார அலுவலர்கள் அறிவிக்கவுள்ளனர். இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது.

தொடர்ந்து பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தி னால் மொத்த வியா பாரிகளுக்கு ரூ.500, சில் லறை வியாபாரிகளுக்கு ரூ.200, உபயோகப்படுத்துவோருக்கு ரூ.100 என அபராதம் விதிக்கப்படும் என சுகாதார ஆய்வாளர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.