Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெரியகுளத்தில் பிளாஸ்டிக் பொருள்களை வரும் 15 முதல் பயன்படுத்தத் தடை

Print PDF

தினமணி 06.10.2010

பெரியகுளத்தில் பிளாஸ்டிக் பொருள்களை வரும் 15 முதல் பயன்படுத்தத் தடை

பெரியகுளம்,​​ அக்.​ 5:​ பெரியகுளத்தில் வரும் 15-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகள்,​​ கேரி பேக்குகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தத் தடைவிதிப்பது என,​​ நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.​ ​

​ ​ ​ ​ இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு,​​ நகராட்சி ஆணையர் ​(பொறுப்பு)​ என்.​ மோனி தலைமை வகித்தார்.​ சுகாதார ஆய்வாளர்கள் எஸ்.​ அகமது கபீர்,​​ டி.​ ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.​ ​ ​ ​ ​ ​ இதில்,​​ உணவகங்கள்,​​ மளிகைக் கடை,​​ டீ கடை உள்ளிட்ட வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.​ ​ ​ ​ ​ ​ ​ அப்போது,​​ நகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து விதமான வர்த்தக நிறுவனங்களிலும் வரும் 15-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக் கூடாது.​ மேலும்,​​ விற்பனை செய்யவும் கூடாது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.​ ​

​ ​ ​ ​ எனவே,​​ இதனை மீறி பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டால்,​​ அவற்றை பறிமுதல் செய்வதோடு,​​ அபராதமும் விதித்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று,​​ ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.