Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கிராமங்களில் சுற்றுச்சூழல் பாதுகாக்க பிளாஸ்டிக் கழிவை அழிப்பதற்கு சிமென்ட் ஆலையுடன் ஒப்பந்தம்

Print PDF

தினகரன்                  09.11.2010

கிராமங்களில் சுற்றுச்சூழல் பாதுகாக்க பிளாஸ்டிக் கழிவை அழிப்பதற்கு சிமென்ட் ஆலையுடன் ஒப்பந்தம்

மதுரை, நவ.9: கிராமங்களில் சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து அழிக்க தனியார் சிமென்ட் ஆலையுடன் ஒப்பந்தம் போடப்படும் என கலெக்டர் காமராஜ் தெரிவித்தார்.

உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூரில் கன ரா வங்கி சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் தீமை குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.

இதில் கலெக்டர் காம ராஜ் பேசியதாவது: குப்பைகளிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளை தனியாக பிரித்து அழிக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதற்காக ராம்கோ சிமென்ட் ஆலையுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. நகராட்சி, பேரூராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இங்கு கொட்டப்படும் குப்பைகளிலிருந்து டீ கப், குடிநீர் பாட்டில்கள், பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவு களை மட்டும் பிரிக்கும் பணியை அந்தந்த உள்ளா ட்சி பணியாளர்கள் மேற்கொள்வர். இந்த பிளாஸ்டிக் கழிவுகளை சிமென்ட் நிறுவனம் தனது ஆலைக்கு எடுத்து சென்று தீ வைத்து அழிக்கும். இந்த தீயால் கிடைக்கும் வெப்பம் சிமென்ட் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

சாதாரணமாக பிளாஸ் டிக் கழிவுகளை எரித்தால் அதிலிருந்து வெளியாகும் புகை காற்றை மாசுபடுத்தும். ஆனால் சிமென்ட் ஆலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அதிகபட்ச வெப்பநிலையில் பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படும். இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

தற்போது கிராமங்களில் சுற்றுச்சூழலை பாதுகாக்க இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக கருப்பாயூரணி, மேல மடை, சமயநல்லூர் உள் ளிட்ட சில பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கிராமப்பகுதியில் மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் தான் திட்டம் வெற்றி பெறும். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணி யை மாணவ, மாணவியர் செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார்.

ரூ.20லட்சம் மதிப்பி லான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். கன ரா வங்கி துணை பொது மே லாளர் பாலசந்தர், நபார்டு உதவி பொதுமேலாளர் சங்கரநாராயணன், முன்னோடி வங்கி மேலாளர் சுப்பிரமணியன், செல்லம்பட்டி ஒன் றிய துணைத்தலைவர் பா ண்டி, பஞ்சாயத்து தலைவர் ஜெயக்கொடி பங்கேற்ற னர்.