Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆம்பூர் நகரில் பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகளுக்கு தடை

Print PDF

தினமணி              20.11.2010

ஆம்பூர் நகரில் பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகளுக்கு தடை

ஆம்பூர், நவ. 19: ஆம்பூரில் பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகள் விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதித்து நகர்மன்றம் வெள்ளிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ஆம்பூர் நகர்மன்றத்தின் அவசர கூட்டம் அதன் தலைவர் வாவூர் நஜீர் அஹமத் தலைமையில் நடைபெற்றது. இதில், "நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டீ கப்புகள், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பாட்டில்கள் கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பை ஏற்படுத்தி விடுகிறது.

இதனால் சாலைகளில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் பாலாறு, காணாறு படுக்கைகளில் மாசு ஏற்படுத்துகிறது. எனவே, நகராட்சி எல்லைக்குள் பிளாஸ்டிக் பைகள், பாலிதின் பைகள், பிளாஸ்டிக் டீ கப்புகள் மற்றும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பாட்டில்கள் விற்பனை செய்வதையும், அவற்றை பயன்படுத்துவதையும் தடை செய்வது.

ஆம்பூரில் ரூ.4.08 கோடியில் சிறப்பு சாலைகள் திட்டம் 2010-2011 கீழ் மேற்கொள்ளப்பட உள்ள சாலை பணிகளுக்கு வரப்பெற்ற ஒப்பந்த புள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நகர்மன்ற துணைத் தலைவர் தமிழரசி, பொறியாளர் இளங்குமரன், சுகாதார அலுவலர் கணேசன் உள்பட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.