Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகரில் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் தடை வருகிறது

Print PDF

தினமணி          30.11.2010

நகரில் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் தடை வருகிறது

மதுரை, நவ. 29: மதுரை நகரில் ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் மெல்லிய பிளாஸ்டிக் உபயோகம் அதிகரித்து வருவது பற்றி ஆணையரிடம் கேட்டதற்கு, மதுரை மாநகரில் 20 மைக்ரான் அளவுக்கும் குறைந்த டீ கப்,கேரி பேக் போன்றவற்றை விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை செய்வதற்கு மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. 2011 ஜனவரி 1 முதல் மாநகராட்சி முழுவதிலும் இந்தத் தடை அமலுக்கு வருகிறது.

சுற்றுலா விடுதிகளில் தரமான உணவு

மதுரை, நவ. 29: மதுரையில் சுற்றுலாத்துறை விடுதிகளில் தரமான உணவு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாநில சட்டப்பேரவை பொது நிறுவனங்களின் குழுத் தலைவர் டி.யசோதா எம்.எல்.. தெரிவித்தார்.

மதுரை மாவட்டத்தில் அக்குழுவின் ஆய்வு திங்கள்கிழமை நடைபெற்றது. அதன்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் டி. யசோதா கூறியது:

சட்டப்பேரவை பொது நிறுவனங்களின் குழு மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளை ஆய்வு செய்தது. போக்குவரத்து, சுற்றுலாத்துறை, தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றையும் குழு ஆய்வு செய்தது. அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்குத் தேவையான பரிந்துரைகளை அரசுக்கு அளிப்போம். முதல்வர் கருணாநிதியிடமும் ஊழியர்களின் ஊதிய விவரத்தை எடுத்துரைப்போம். அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையில் அரவை முடிந்த கரும்புச் சக்கைகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கான பணிகள் ஓராண்டில் நிறைவுபெறத் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு தமிழக முதல்வரிடம் பரிந்துரைப்போம்.

மதுரை போக்குவரத்துப் பணிமனையில் ஓட்டுநர் பயிற்சிக்கு மாதிரி பஸ் வடிவமைப்பு இருந்ததையும் பார்வையிட்டோம். மேலும், சில கேள்விகளை அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம். அவர்களும் கடிதம் மூலம் பதிலளிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

சுற்றுலாத்துறையின் விடுதிகளை ஆய்வு செய்தோம். அங்கு உணவு வகைகளை தரமாக அளிக்க அறிவுறுத்தி உள்ளோம். மேலும் விடுதிகளைச் சுத்தமாகப் பராமரிக்கவும் பணியாளர்களிடம் கூறியுள்ளோம். சுற்றுலாத்துறையில் நமது மாநிலம் 3-வது இடம் வகித்தாலும், வெளிநாட்டவர் வருகையில் முதலிடத்தில் உள்ளது.

மாவட்டத்தில் சுற்றுலா மேம்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் சி.காமராஜ் அளித்த விளக்கம் பாராட்டும் வகையில் இருந்தது என்றார்.

பேட்டியின்போது, குழு உறுப்பினர்களான எம்.எல்..க்கள் பி. மூர்த்தி, கே.எஸ்.கே. ராஜேந்திரன், ஓசூர் கோபிநாத், என்.நன்மாறன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சி.காமராஜ், குழு துணைச் செயலர் கு.இந்துமதி, சார்புச் செயலர் சி.சகுந்தலா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.