Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி 67 பள்ளிகளிலும் மரம் நடும் திட்டம் துவக்கம்

Print PDF

தினகரன்            07.12.2010

மாநகராட்சி 67 பள்ளிகளிலும் மரம் நடும் திட்டம் துவக்கம்

மதுரை, டி. 8: மாநகராட்சி அலுவலகம், 67 பள்ளிகளிலும் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கியது. மதுரை நகரில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு பசுமையாக்கப்படும் என மத்திய அமைச்சர் மு..அழகிரி தேர்தல் வாக்குறுதி அளித்தார். இதுவரை 36 ஆயிரத்து 800 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

மாநகராட்சி சார்பில் அலுவலகம், 67 பள்ளிகள் , நீரேற்று நிலையம், கழிவு நீரேற்று நிலையங்களில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி வளாகத்தில் நேற்று மேயர் தேன்மொழி மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். ஆணையாளர் செபாஸ்டின் பேசும்போது "ஒரு மரம் வளர்த்தால் 20 சதவீதம் கார்பன்டை ஆக்சை டை உறிஞ்சி, 14 சதவீதம் ஆக்சிசனை வெளியிடுகிறது. பள்ளி மாணவ மாணவிகளிடையே மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்" என்றார்.

விழாவில் மண்டல தலைவர் இசக்கிமுத்து, தலைமை பொறியாளர் சக்தி வேல், துணை ஆணையாளர் தர்ப்பகராஜ், திட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமாறன், மரம் வளர்ப்பு குழு செயலாளர் ஜெகதீசன், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.