Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மறு சுழற்சிக்கு பயன்படாத பிளாஸ்டிக் தயாரித்தால் அபராதம்; தர்மபுரி நகராட்சி அறிவிப்பு

Print PDF

தினகரன்          09.12.2010

மறு சுழற்சிக்கு பயன்படாத பிளாஸ்டிக் தயாரித்தால் அபராதம்; தர்மபுரி நகராட்சி அறிவிப்பு

தர்மபுரி, டிச.9: தர்மபுரி நகரமன்ற கூட்டம் கூட்ட அரங்கில் நடந்தது. ஆணையாளர் அண் ணா துரை முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நகரமன்றத்தலைவர் ஆனந்தகுமார் தலைமை தாங்கி பேசியதாவது:

தர்மபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கும் சாலை வசதி மேம்படுத்த அரசு ரூ5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் கடந்த மாதம் நடந்த கூட்டத் தொடரில் ரூ2 கோடி ஒப்புதல் பெறப்பட்டது. தற்போது ரூ3 கோடிக்கு ஒப்புதல் பெறப்படுகிறது. தர்மபுரி நகராட்சி பகுதியில் 6&க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இந்நிறுவனங்கள் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் வகையில் தயாரிக்க வேண்டும். இல்லையென்றால் ரூ5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும் சிறுவணிகர்களுக்கு ரூ500 அபராதம் விதிக்கப்படும். ஆறுமுகஆசாரிதெரு, சின்னசாமி நாயுடு தெரு, முகமதுஅலி கிளப் சாலைகள் சுமார் 2 அடி உயரத்துக்கு மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த சாலைகளையொட்டி ரூ75 லட்சத்தில் மழைநீர் வழிந்து ஓட நவீன சாக்க டை கால்வாய் ஏற்படுத்தப்பட உள்ளது என்றார். இக்கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள் புனிதா, ஜெயந்தி, அன்புக்கரசி, சம்சாத், முனியம்மாள், கலா கலந்து கொண்டனர்.