Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாமல்லபுரத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை! சுற்றுலா மேம்பாட்டிற்கு பேரூராட்சி முடிவு

Print PDF

தினமலர்              13.12.2010

மாமல்லபுரத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை! சுற்றுலா மேம்பாட்டிற்கு பேரூராட்சி முடிவு

மாமல்லபுரம் : சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தை மேம்படுத்தும் நோக்கில், அங்கு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்க பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மாமல்லபுரம் சர்வதேச சுற்றுலா தலமாக உள்ளது. இங்குள்ள பல்லவர் கால கலைச்சின்னங்களை கண்டு ரசிக்க உள்நாட்டிலிருந்தும், வெளநாடுகளிலிருந்தும் ஏராளமானோர் வருகின்றனர். புராதன சின்னங்களை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை பராமரித்து பாதுகாத்து வருகிறது.

பிற இடங்களில் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவன துப்புரவுப் பணியாளர்கள் மூலம் துப்புரவு பணி மேற்கொள்ளப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களும் நீண்டகாலமாக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால், பிளாஸ்டிக் குப்பைகள் அதிகளவில் குவிகின்றன.

சுற்றுலா பயணிகள் வெளியிடங்களிலிருந்து வரும்போது உணவுப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களை பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகளில் கொண்டு வருகின்றனர். நகரிலும் பல்வேறு கடைகளில் விற்கப்படும் பொருட்கள், பிளாஸ்டிக் பைகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால், நாளுக்கு நாள் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகரித்து வருகின்றன.

பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியும் தீர்வு ஏற்படவில்லை. தற்போது ஹேண்டு இன் ஹேண்டு தனியார் தொண்டு நிறுவனம் மூலம், பிளாஸ்டிக் ஒழிப்பு பிரசாரத்தை பேரூராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தி வருகிறது.

மேலும், பொதுமக்கள் பிப்ரவரி 10ம் தேதி வரை இருப்பில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திக் கொள்ளலாம். பிளாஸ்டிக் பொருட்களை கொள்முதல் செய்வோர் இனி பிளாஸ்டிக் பொருட்களை கொள்முதல் செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், வியாபாரிகள், மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பிப்ரவரி 10ம் தேதிக்கு மேல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்க கலெக்டரிடமிருந்து உத்தரவு பெற்று நடைமுறைப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.