Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தாராசுரத்தில் பிளாஸ்டிக் பைக்கு தடை மீறினால் சட்ட நடவடிக்கை

Print PDF

தினகரன்                 14.12.2010

தாராசுரத்தில் பிளாஸ்டிக் பைக்கு தடை மீறினால் சட்ட நடவடிக்கை

கும்பகோணம், டிச. 14: தாராசுரம் பேரூராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தாராசுரம் பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரித்துள்ளார்.

இதுபற்றி தாராசுரம் பேரூராட்சி செயல் அலுவலர் மோகன்தாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தாராசுரம் பேரூராட்சியில் சுத்தம், சுகாதாரம் காக்கப்பட்டுவருகிறது. பொதுமக்கள் தாராசுரம் பேரூராட்சி நிர்வாகத்துடன் ஒத்துழைத்து சுத்தம், சுகாதாரம், குப்பையில்லாத பேரூராட்சி என்ற நிலையை உருவாக்கிட முன்வரவேண்டும். நம்சுகாதாரம் நம்கைகளில்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் அனைவரும் உணர்ந்து செயல்பட்டால் மாநிலத்திலேயே சிறந்த பேரூராட்சியாக திகழும். குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டாமல் பேரூராட்சியின் குப்பை வண்டியிலும், குப்பை தொட்டிகளில் மட்டுமே கொட்டவேண்டும். கழிவு நீரை தேங்கவிடாமல் முறைப்படி அப்புறப்படுத்த வேண்டும்.

பொது இடங்களில் மல, ஜலம் கழிக்காமல் கழிவறைகளை உபயோகிக்கவேண்டும். நீர் சேமிப்பு தொட்டிகள், பாத்திரங்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் கொசுக்கள் புகாமல் நன்றாக மூடிவைக்கவேண்டும். கழிவு நீர் வாய்க்கால்களில் குப்பைகளை கொட்டி நீரோட்டத்தை தடை செய்யக்கூடாது. கால்நடைகளை சாலையில் கட்டக்கூடாது. டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் ஏற்படாமல் இருக்க அனைவரும் கொதிக்க வைத்த தண்ணீரை பயன்படுத்தவேண்டும்.

பொதுமக்கள் ஒரு முறை மட்டுமே பயன்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம். பிளாஸ்டிக் பைகளை பேரூராட்சி பகுதியில் உபயோகிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தொற்று நோய் ஏற்படாமல் இருக்க ஈ மொய்த்த மற்றும் ஆறிய உணவு பொருட்களை தவிர்க்கவேண்டும். ஆறு, குளம், வாய்க்கால்களில் உள்ள நீரை குடிக்க பயன்படுத்தாமல் பாதுகாக்கப்பட்ட குடிநீரை பருகவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.