Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் : தாந்தோணியில் தடை செய்யப்பட்ட நகராட்சி, மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடவடிக்கை

Print PDF
தினகரன்       16.12.2010

பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் : தாந்தோணியில் தடை செய்யப்பட்ட நகராட்சி, மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடவடிக்கை

கரூர், டிச.16: தாந்தோணி நகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மக்காத பிளாஸ்டிக் பைகள், கப்புகள் போன்ற பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதால் தாந்தோணி நகராட்சியில் பிளாஸ்டிக் பொரு ட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், விற்பனை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தவும் நேற்று நகராட்சி சுகாதாரப் பிரிவி னர் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சார்பில் நகராட்சி பகுதியில் உள்ள ஹோட்டல்கள், பல்பொருள் அங்காடிகள், பேக்கரிகள், சிறு வியாபார நிறுவனங்கள் ஆகியவற்றில் திடீர் ஆய்வு நடத்தினர்.

அப்போது, மறுசுழற்சிக்கு கடினமாக உள்ள பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவோ, உபயோகிக்கவோ கூடாது என வியாபாரிகளிடம் தெரிவித்தனர். மேலும், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பறிமுதல் செய்தனர். தாந்தோணி, காந்திகிராமம் பகுதியில் சோதனை நடத்தியதுடன் பொதுமக்களிடமும் பிளாஸ்டிக்கினால் ஏற்படுகின்ற தீமைகளை விளக்கினர். கறுப்பு, வெள்ளை மற்றும் பல கலர்களில் உள்ள பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களைக் கேட்டுக்கொண்டனர்.

நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர் சதீஸ் சாய்நாத் மற்றும் நகராட்சி அலுவலர்கள், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் இந்த ஆய்வினை நடத்தினர். சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் களை பயன்படுத்த வேண் டாம் என கேட்டுக்கொண்டனர்.

இதுகுறித்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் சதீஸ்சாய்நாத் கூறுகையில், எதிர் கால சந்ததியினருக்காக உலக நாடுகள் சுற்றுச்சூழ லை பாதுகாப்பதில் முன்னு ரிமை கொடுத்து வருகின் றன. சுற்றுச்சூழலை பாதுகாத்தால் மட்டுமே இயற்கை அன்னையை சாவின் விழிம் பில் இருந்து நாம் காப்பாற்ற முடியும். இதை உணர்த்தவே இதுமாதிரியான விழிப்புணர்வை மாவட்ட சுற்றுச்சூழல் துறை மூலம் ஏற்படுத்தியுள்ளோம். 20 மில்லி மைக்ரான் தடிமனுக்கு கீழே உள்ள பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தும் போது அவற்றை மறு சுழற்சி செய்ய முடியாது. மேலும், அவை பூமிக்கு அடியில் மக்காத குப்பையாக இருந்து மழைநீரை பூமிக்குள் செல்ல தடை விதித்து நிலத்தடி நீரோட்டத்தை பாதிக்கின்றன. ஏற்கனவே, நீரோட்டம் 100 அடிக்கு கீழே சென்று ள்ள நிலையில் இதுபோன்ற பிளாஸ்டிக்கினால் மேலும், நீரோட்டம் தடைபட்டு நாளடைவில் நகர் பகுதியில் தண்ணீரே கிடைக்காத நிலை ஏற்படும் என்றார்.