Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

20 மைக்ரான் பிளாஸ்டிக் தயாரிக்க தடை

Print PDF
தினகரன்      05.01.2011

20 மைக்ரான் பிளாஸ்டிக் தயாரிக்க தடை

கோவை, ஜன. 5:

கோவையில் 20 மைக்ரான் அளவிற்கு கீழ் பிளாஸ்டிக் பொருள் தயாரி க்க தடை விதிக்கப்பட்டுள் ளது.

கோவை நகரில் பிளாஸ் டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது. வணிக வளாகம், ஓட்டல், வர்த்தக நிறுவனங் கள், திருமண மண்டபம், விழாக்களில் பிளாஸ்டிக் பொருட்களை அதிகளவு பயன்படுத்துகின்றனர். குறிப் பாக ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர், தட்டு, மேஜை விரிப்பு, கேரி பேக் போன்றவை 20 மைக் ரான் அளவிற்குள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இவற்றை தடை செய்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல் இருக்கிறது. நகரில் உள்ள 120 டாஸ்மாக் கடைகளில் கடந்த ஏப்ரல் மாதம் முழு அளவில் பிளாஸ்டிக் டம்ளர் தடை கொண்டு வரப்பட்டது. இறைச்சி, பூக்கடைகளிலும் கேரி பேக் ஒழிக்கப்பட்டு இலைகட்டு நடைமுறைக்கு வந்தது. இதற்கு மக்களிடை யே வரவேற்பு கிடைத்தது. ஆனால், புதிய திட்டம் 2 மாதத்தில் முடிவுக்கு வந்தது. தற்போது முன்பை விட அதிகளவு பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. மாதந்தோ றும் நடக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கூட்டத்திலும் இது தொடர்பாக உருப்படி யான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பிளாஸ்டிக் பொருட்களு டன் ஒப்பிடும் போது துணி, பேப்பர் பேக் விற்பனை 5 சதவீதத்தை கூட எட்டவில் லை. நகரில் ரங்கே கவுடர் வீதி, வைசியாள் வீதி, தியாகி குமரன் வீதி உள்ளிட்ட பகுதி யில் 20 மைக்ரான் அளவிற்கு குறைவான பிளாஸ்டிக் பொ ருட்கள் ஒட்டு மொத்தமாக விற்கப்படுவதாக தகவல் வெளி யாகியுள்ளது. கோவை மாவட்டத்திற்கு மட்டுமின்றி, கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இங்கேயிரு ந்து பிளாஸ்டிக் பொருட்கள் சப்ளையாவதாக தெரியவந்துள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலத்தை சேர் ந்த சிலர் கோவையை பிளாஸ் டிக் கவர் பொருட்களை ஒட்டு மொத்தமாக விற்பனை செய்து வருகின்றனர்.

கோவை மாவட்ட மாசு கட்டுபாட்டு வாரிய பொறியா ளர் காமராஜ் கூறுகையில், “ 40 மைக்ரான் வரையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் 20 மைக்ரான் அளவிற்கு கீழ் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி யாரும் தயாரிப்பதில்லை. ஆனால் வெளி மாநிலங்களில் இருந்து 20 மைக்ரான் அளவில் பிளாஸ்டிக் வருகிறது. இவற் றை தடுக்க கலெக்டர் தலை மையில் ஆலோசனை நட த்தி வருகிறோம். பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனங்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது, ” என்றார்.

கோவை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறுகையில், “ 20 மைக்ரான் அளவிற்கு கீழ் தடிமன் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை விற்க கூடாது.

மீறி விற்கும் கடை, ஒட்டு மொத்த விற்பனை நிலையங்களில் சோதனை நடத்தி அவற்றை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது, ” என்றார்.