Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சிட்லப்பாக்கம் பேரூராட்சியில் 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை

Print PDF
தினமலர்        20.12.2011

சிட்லப்பாக்கம் பேரூராட்சியில் 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை

 
சிட்லப்பாக்கம் : ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த சிட்லப்பாக்கம் பேரூராட்சி தடை விதித்துள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் பொருட்களை கையாளுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு வருவதால், பேரூராட்சி இயக்குனரகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து பேரூராட்சி பகுதிகளுக்குட்பட்ட இடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கோ, பயன்பாட்டிற்கோ தடை விதிக்க உத்தரவிட்டிருந்தது. இதன்படி, சென்னையை அடுத்த சிட்லப்பாக்கம் பேரூராட்சியில் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் 40 மைக்ரான் அளவிற்கு கூடுதலான பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சிட்லப்பாக்கம் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட கடைகளிலோ, ஓட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களிலோ பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்றும், மீறி விற்பனை செய்தால் அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும் என்றும் பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.