Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பேரூராட்சிகளில் பிளாஸ்டிக் தடை :விழிப்புணர்வு கூட்டம்

Print PDF

 தினமலர்                 27.07.2012

பேரூராட்சிகளில் பிளாஸ்டிக் தடை :விழிப்புணர்வு கூட்டம்

பள்ளிப்பட்டு : பேரூராட்சிகளில் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருவதைத் தொடர்ந்து வியாபாரிகள், பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
பொதட்டூர்பேட்டை பேரூராட்சி, 18 வார்டுகளில், 2,500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு, 150க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும், நான்கு திருமண மண்டபங்கள் உள்ளன.

பேரூராட்சியில், அதிகளவில் பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் மற்றும் பொருட்கள் பயன்படுத்துவதால், சுற்றுச்சுழல் பாதிக்கப்படுகிறது. இதை பாதுகாக்கும் வகையில், பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரும் செப்டம்பர் மாதம், ஒன்றாம் தேதி முதல், பிளாஸ்டிக் பை மற்றும் டம்ளர்கள் கடைகளில் விற்பதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதை தொடர்ந்து பொதுமக்கள், காய்கறி கடை, ஓட்டல், திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும், சிறு வியாபாரிகளுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து, விழிப்புணர்வு கூட்டம் பேரூராட்சிதலைவர் தண்டபாணி தலைமையில் நடந்தது. துணை தலைவர் ரவி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் பாஸ்கர் வரவேற்றார். இதில், 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.ஊத்துக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு அதன் தலைவர் பத்மாவதி தலைமை வகித்தார். செயல்அலுவலர் கதாதரன் வரவேற்றார். 40 மைக்ரானுக்கு குறைவாக உள்ள, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. மட்காத பிளாஸ்டிக் பொருட்களால் நிலத்தடி நீர் மாசுபடும்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்து, விளம்பர பலகைகள் வைக்க வேண்டும். துண்டு பிரசுரங்கள் வினியோகித்து பிளாஸ்டிக்கினால் ஏற்படும் அபாயம் குறித்து விளக்கவேண்டும். ஆகஸ்ட் ஒன்று முதல், இந்த பிரசாரத்தை மேற்கொண்டு, செப்.15 முதல், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள்
பயன்படுத்துவதை தடை செய்வது என, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.