Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

Print PDF

தினமணி                 01.08.2012

மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

கடலூர், ஜூலை 31: கடலூர் மீன் மார்க்கெட்டில் விதிமுறைகளை மீறி பயன்படுத்திய கேரி பேக் மற்றும் ஒரு முறைப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை நகராட்சி ஊழியர்கள் அண்மையில் பறிமுதல் செய்தனர்.

 ÷கடலூர் மாவட்டத்தில் ஒருமுறைப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு செய்து வருகிறது.

 ÷இது தொடர்பாக பேரணி, விழிப்புணர்வு, பூஜ்ஜிய கழிவு மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பயிற்சி என மாவட்ட நிர்வாகம் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டைத் தடுக்க முயற்சி எடுத்து வருகிறது.

 ÷இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ ஆகியோர் கடலூர் பஸ் நிலையத்துக்குச் சென்று துணிப்பையை பயன்படுத்தி பொருள்கள் வாங்கினர். மேலும் அங்கிருந்த பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 ÷ஒருமுறைப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை தடை செய்ய வேண்டும், பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என தீவிரம் காட்டி வரும் அதே வேளையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இதன் பயன்பாடு குறையவில்லை.

 ÷கடலூர் திருப்பாப்புலியூர் மீன் மார்க்கெட்டில் கடலூர் நகராட்சி சுகாதாரத் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

 ÷அப்போது மீன் கடையில் பயன்படுத்தப்பட்ட ஒரு முறைப் பயன்படுத்தப்படும் கேரி பேக்குகளை பறிமுதல் செய்தனர்.