Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மதுக்கரையில் தடை

Print PDF

தினகரன்    06.08.2012

40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மதுக்கரையில் தடை

கோவை,:மதுக்கரை பேரூராட்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ்ராம், கண்காணிப்பு அலுவலர் திருவாசகம் தலைமையில் வணிக, வர்த்தக நிறுவனங்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் பிளாஸ்டிக் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், 40 மைக்ரான் தடிமன் அளவிற்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்களை விற்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது. மதுக்கரை வட்டாரத்தில் இறைச்சி கடை, மளிகை கடை, பெட்டி கடைகளில் 40 மைக்ரான் தடிமன் அளவிற்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் கேரி பேக், டம்ளர் போன்றவற்றை விற்பனை செய்ய கூடாது. மீறி விற்பனை செய்தால் பறிமுதல் செய்யப்படும் என பேரூராட்சி நிர்வாகத்தினர் எச்சரித்தனர். மேலும் வணிக கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்பாக ரெய்டு நடத்தவும் உத்தரவிடப்பட்டது.