Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினமலர்     10.08.2012

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

சென்னிமலை: சென்னிமலை டவுன் பஞ்சாயத்து பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து பிரச்சாரங்கள் பல்வேறு வகையில் நடத்தப்படுகிறது.

இதன் ஒருபகுதியக, பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது. டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் துவங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து குமரன் சதுக்கத்தில் நிறைவு பெற்றது. பிளாஸ்டிக் தீமை குறித்தும், பிளாஸ்டிக் கேரி பேக் பயன்படுத்த கூடாது எனவும் பள்ளி மாணவ, மாணவியர் வலியுறுத்தினர்.பள்ளி மாணவ, மாணவியருக்கு கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, பேச்சுப்போட்டி ஆகிய போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. சென்னிமலை டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் தெய்வசிகாமணி தலைமை வகித்தார்.

பரிசுகளை டவுன் பஞ்சாயத்து தலைவர் ஜம்பு என்கிற சண்முகசுந்தரம் மற்றும் துணைத் தலைவர் தெய்வசிகாமணி ஆகியோர் வழங்கினர். வார்டு கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Saturday, 11 August 2012 08:53