Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கடைகள், ஓட்டல்களில் சோதனை 60 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் நெல்லையில் அதிகாரிகள் அதிரடி

Print PDF
தினகரன்      14.08.2012

கடைகள், ஓட்டல்களில் சோதனை 60 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் நெல்லையில் அதிகாரிகள் அதிரடி
 
நெல்லை, : நெல்லையில் 40 மைக் ரான் அளவுக்கு கீழுள்ள பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநக ராட்சி சார்பில் விழிப் புணர்வு பிரசாரங்கள், பேரணிகள் நடத்தப்பட்டன. கடைகளில் பிளாஸ்டிக் கவர் பயன்படுத்தினால் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது.

எனினும் பிளாஸ்டிக் கவர்கள் முழுமையாக ஒழிந்தபாடில்லை. அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறன. இதைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் மோகன் உத்தரவின்பேரில் சுகாதார அதிகாரி முனீஸ்வரி, ஆய்வாளர்கள் சாகுல் அமீது, பாலசுப்பிரமணியன், பெருமாள் மற்றும் ஊழியர்கள் நேற்று பாளை யங்கோட்டை மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகள், ஓட்டல்கள், சூப்பர் மார்க் கெட், டாஸ்மாக் பார்கள், பேக்கரி, மீன் கடை ஆகியவற்றில் அதிரடி சோதனை நடத்தி பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘மார்க்கெட் பகுதியில் 110 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 40 கடைகளில் இருந்து 60 கிலோ பிளாஸ்டிக் கவர், பைகள் பறிமுதல் செய்யப்பட்டன என்றனர்.
Last Updated on Tuesday, 14 August 2012 09:58