Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

Print PDF

தினமணி            14.08.2012

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

பொன்னேரி, ஆக. 13: மீஞ்சூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பொருள்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணி ஆகியவை அண்மையில் நடைபெற்றது.

÷முகாமுக்கு, திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மீஞ்சூர் பேரூராட்சித் தலைவர் சுப்பிரமணி, பொன்னேரி கோட்டாட்சியர் கந்தசாமி, மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரன், மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ÷முகாமில், பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது குறித்து விளக்கி கூறப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்பணர்வுப் பேரணியை பேரூராட்சித் தலைவர் சுப்பிரமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

÷பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட இப்பேரணி தேரடித் தெரு, காந்தி தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாகச் சென்று பேரூராட்சி அலுவலகம் அருகில் நிறைவடைந்தது.

÷முகாம் மற்றும் பேரணியில் மீஞ்சூர் பேரூராட்சி துணைத் தலைவர் அசோக், மீஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர் சிங்காரவேலு, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவைச் செயலர் சேக்அகமது, வார்டு உறுப்பினர்கள் தேசிங்குராஜன், சுரேஷ், சித்திக்பாஷா, உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Tuesday, 14 August 2012 10:41