Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

எழுமலை பேரூராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை: தலைவர் சித்ரா பாண்டியன் அறிவிப்பு

Print PDF
மாலை மலர்              16.08.2012

எழுமலை பேரூராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை: தலைவர் சித்ரா பாண்டியன் அறிவிப்பு
எழுமலை பேரூராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை: தலைவர் சித்ரா பாண்டியன் அறிவிப்பு

உசிலம்பட்டி, ஆக. 16-மதுரை மாவட்டம் எழுமலை பேரூராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் குறிப்பாக 40 மைக்ரான் தடிமன் அளவுக்கு கீழுள்ள பிளாஸ்டிக் பைகள் சுற்று சூழலுக்கு மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாலும், பிளாஸ்டிக் பைகளை அறவே பயன் படுத்தாத நிலையினை உருவாக்கிட பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பேரூராட்சி இயக்குனரால் வழங்கிய அறிவுரையின்படி இப்பேரூ ராட்சியில் பிளாஸ்டிக் கழிவுகளை முற்றிலும் ஒழிப் பதற்கான தீர்மானம் மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
 
இதனை தொடர்ந்து பேரூராட்சி பகுதியுள்ள சிறு வியாபாரிகள், தெரு வியாபாரிகள், பூக்கடைக் காரர்கள், காய்கறிகடைகள், ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்கள் ஆகி யோர்களுடன் பிளாஸ்டிக் கழிவுகளை ஒழித்திட விழிப்புணர்வு கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்டு 15-ந்தேதி முதல் பயன்படுத்த மாட்டோம் எனவும், எங்களது முழு ஒத்துழைப்பை வழங் குவதாகவும் தெரிவித்தனர். பேரூராட்சி பகுதியில் உள்ள சுயஉதவிக்குழுக்கள் மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராக தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.
 
மேலும் பள்ளி மாணவ- மாணவிகளிடையே பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்கள் மூலம் பிளாஸ் டிக் பயன்பாடு தீமைகள், விழிப்புணர்வு குறித்த மனித சங்கிலி நடைபெற்றது. இதனை தொடர்ந்து இப்பேரூராட்சி பகுதியில் நேற்று (புதன்கிழமை) முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்தினால் அபராதம் வசூலிக்கப்படும் என பேரூராட்சி தலைவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் சித்ரா பாண்டியன், செயல் அலுவலர் கண்ணன், துணைத்தலைவர், மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.