Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கரூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினமலர்     23.08.2012

கரூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கரூர்: கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பழைய ஜெயங்கொண்டம் டவுன் பஞ்சாயத்து அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை பஞ்சாயத்து தலைவர் செல்வராஜ் கொடி யசைத்து தொடங்கி வைத்தார். '

பஞ்சாயத்து துணைத்தலைவர் பெரியசாமி, செயல் அலுவலர் சுந்தரம், அலுவலர் இந்திரஜித் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.குளித்தலையில் நடந்த பேரணியை நகராட்சி தலைவர் பல்லவி ராஜா கொடி யசைத்து துவக்கி வைத்தார்.

அன்னை நாமகிரி மழலையர் துவக்கப் பள்ளி மாணவ, மாணவிகள், பேராளம்மன் தெரு, பஜனமடம், காவிரி நகர், அக்ரஹாரம், கடைவீதி ஆகிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர். நகராட்சி கமிஷனர் கலைமணி, கவுன்சிலர் ராதிகா, பள்ளி தாளாளர் கஸ்துரிரங்கன் உள்பட பலர் பங்கேற்றனர்.

மருதூர் டவுன் பஞ்சாயத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி தலைவர் சம்பத் தலைமையில் நடந்தது. பேரணியில் துணைத்தலைவர் அம்பிகா, செயல் அலுவலர் சண்முகம், ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள், கவுன்சிலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

நங்கவரம் டவுன் பஞ்சாயத்து சார்பில் டவுன் பஞ்சா யத்து தலைவர் மாரிமுத்து தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. செயல் அலுவலர் முகமதுரசீத், கவுன்சிலர்கள், ஆசிரியர்கள், மகளிர்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

வேலாயுதம்பாளையத்தில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் மனித சங்கிலி ஊர்வலம் நடந்தது. பேரணியை புன்செய் புகளூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் லலிதா கொடி யசைத்து துவக்கி வைத்தார்.செயல் அலுவலர் சுப்ரமணியம், துணைத்தலைவர் கௌசல்யாதேவி, பள்ளி தலைமையாசிரியர் தமிழரசி மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.